|
Welcome,
Guest
|
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Kadagam
(1 viewing) (1) Guest
Tips
|
TOPIC: 2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Kadagam
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Kadagam 1 month, 2 weeks ago #1415
|
ஜனவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 12, 14, 19, 21, 23, 28, 30. இந்த ஆங்கிலப் புத்தாண்டு குரு, சனி, சூரியன், ராகு ஆகிய 4 கிரகங்களின் ஆசியோடு துவங்குகிறது. குடும்பத்தில் இருந்த சுணக்கம், கோபதாபம் ஆகியவை நீங்கி இணக்கமான சூழல் உண்டாகும். நேர்மையான போக்கை கையாளும் வியாபாரிகளுக்கு எந்த குறையும் இன்றி பணிகள் முடிய சனி துணை புரிவார். இல்லத்தில் அமைதி நிலவ சுக்ரன் பக்கபலமாய் விளங்குவார். மாணவர்களுக்கு உயர் கல்விக்கான ஆலோசனை தக்க சமயத்தில் கிட்டும். மாதத்தின் முன் பகுதியில் சூரியன் 6ம் இடத்தில் ராகுவுடன் நிற்பதால் அரசு வகைக் காரியங்கள் சாதகமாக முடியும். பணிக்குரிய பாராட்டு வேலையில் இருப்பவர்களின் புது முயற்சிக்கு நெம்பு கோலாய் அமையும். பிறகு 14ம் தேதி முதல் 7ம் இடத்திற்கு மாறுகிறார். பெண்கள் சிறு சிறு பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிக்க வேண்டி இருக்கும். ஜனவரி மாதம் 29 வரை சுக்ரன் நன்மைகளை அள்ளித்தரும் 5ம் வீட்டில் வலம் வருகிறார். கலைஞர்களின் முடங்கிக்கிடந்த கலைத்திறமை தகுந்த வல்லமை, தைரியம் இரண்டையும் தருவார். அத்துடன் புதிய ஒப்பந்தங்களும் லாபகரமாய் அமையும். பிறகு அவர் 6ம் வீடு போவதால் பெண்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. முதல் வாரம் செவ்வாய் 7ம் இடததில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். 8ம் தேதி 6ம் இடத்திற்கு செல்லும் புதன் தன் பங்குக்கு இனிமையான பயண அனுபவங்களை மலரச் செய்வார். 30ம் தேதி புதன் 7ம் வீட்டுக்கு மாறுவதால், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு உதவி புரிபவர்களின் மனப்போக்கிலும் வேண்டாத மாறுதல் தென்படும். கேது 12ல். ஏனோதானோவென்று செயல்படாமல், žராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதம் கட்டாயம் உண்டு. பிப்ரவரி அதிருஷ்ட நாட்கள்: 1, 10, 15, 19, 24, 28. புதன் 18ம் தேதி முதல் நன்மைகளைத் தரும் அஷ்டம வீட்டுக்கு மாறுகிறார். வாரிசுகள் இணக்கமாக செயல்பட்டு உங்களின் ஆசி பெறுவார்கள். மாணவர்களின் பேச்சில் இனிமை கூடும். வேலையில் இருப்பவர்கள் இதுவரை அனுபவித்த பாராமுகம், எதிர்ப்புகள் எல்லாம் பிசு பிசுத்துவிடும். சூரியன் 7, 8 வீடுகளில் இருப்பதால், வீண் பகை வாராதிருக்க பொதுவாழ்வில் இருப்பவர்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்து உரையாடுவது நல்லது. வியாபாரிகள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும். பங்குச் சந்தை, பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வருதல் நல்லது. செவ்வாய் 15 முதல் 8ம் இடம் செல்வதால், கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் பிரத்யேக கவனம் செலுத்தினால், மருத்துவச் செலவுகள் குறையும். சுக்ரன் 6, 7 வீடுகளில் உலா வருவதால் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், வெளி வட்டாரத்தில் எல்லை கோட்டுக்குள் செயல்படுவது புத்திசாலித்தனம். பெண்கள், குடும்பப்பிரச்சினைகளைக் கையாளுகையில் வீண் ஜம்பம், மற்றும் பிடிவாதம் இரண்டையும் புறந்தள்ளி, வினயமாக நடந்தால் வெற்றி உங்களதே! பொறுப்பான பதவி வகிப்பவர்கள் சட்டென்று உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்தாலே சங்கடங்கள் தானே குறையும். மார்ச் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 14, 15, 19, 23, 24, 28. சூரியன் இந்த மாதம் 8, 9 வீடுகளில் நிற்கிறார். பெண்கள் எந்த சூழலிலும் நிதானத்தையும், பொறுமையும் கையாண்டால், நிலைமை žராக இருக்கும். அரசு வழி காரியங்களில் சுணக்கமின்றி தீவிர முயற்சி செய்தால், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். புதன் முதல் வாரம் முதல் 9ம் வீட்டுக்கு போகிறார். வேலையில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். 28ம் தேதி முதல் புதன் 10ம் இடத்திற்கு போகிறார். உங்களின் அந்தஸ்தும், ஆதரவும் உயரும். மார்ச் 22 முதல் சுக்ரன் அஷ்டம வீட்டுக்குப் போவதால், பெண்களுக்கு சொகுசான வாகனங்களில் பயணம் செய்யும் பாக்கியம் கிட்டும். செவ்வாய் 25ம் தேதி 9ம் வீட்டுக்கு செல்வதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் காசோலை மற்றும் வாக்குறுதி வழங்குதல்- இரண்டிலும் நிதானமாக இருப்பது நல்லது. விவசாயிகள் பயிர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி வந்தால், சில விரயங்களைத் தவிர்க்க இயலும். 4ம் வாரம் முதல் புதன் 9ம் இடத்தில் அமர்கிறார். விட்டுக்கொடுத்து சென்றால், பெண்கள் வாழ்வில் வசந்தம் வீசும். வியாபாரிகள் நாணயம், நியாயம் இரண்டையும் கடைபிடித்து வந்தால், வியாபாரத்தில் உள்ள சிக்கல்கள் மட்டுப்படும். ஏப்ரல் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 24. மாதம் முன் பகுதியில் சூரியன் 9ல். மாணவர்கள் நண்பர்களிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பு ஏற்படாது. சூரியன் தமிழ் புத்தாண்டு முதல் உங்களின் வெற்றிக்கு வலுசேர்க்கும். 10ம் இடத்திற்கு செல்கிறார். வியாபாரிகளுக்கு எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் உங்களை நாடி வரும். பெண்களின் மனதை அரித்துக்கொண்டிருந்த கவலைகள் விலகி விடும். ஏப்1 முதல் புதன் வக்ரம் ஆகி 23ல் வக்ர நிவர்த்தி பெற்று விடுகிறார். இந்தக் காலக்கட்டத்தில் பொதுவாழ்வில் இருப்பவர்கள் பணப் புழக்கத்திலும் பேசும் வார்த்தையிலும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு அலைச்சல்கள் அதிகமாகும். மாதப் பிற்பகுதியில் சுக்ரன் நலம் தரும் 9ம் இடத்திற்கு செல்வதால், நூதன பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் கணிசமான லாபம் பெறுவார்கள். கலைஞர்கள் ஈடுபடும் எந்தப் பணியாய் இருந்தாலும் சரி, அதில் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொள்வர். மே அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 11, 15, 19, 20, 28, 29. இந்த மாதம் குரு பகவான் 7ம் தேதி முதல் 10ம் இடத்திற்கு செல்கிறார். பெண்கள் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், குடும்பத்தில் பணமுடை ஏற்படாமலிருக்கும். அக்கம் பக்கத்தாருடன் இதமாய் நடந்துகொண்டால், உறவுகளில் விரிசல் விழுவதைத் தவிர்த்து விடலாம். மே 14 வரை 10ல் உலா வரும் சூரியனோடு 3ம் தேதி முதல் செவ்வாயும் 11ம் தேதி முதல் புதனும் சேர்வதால், உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகளின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மே 30 முதல் புதன் 11ம் இடத்தில் மந்த நிலை மாறி மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மே 15 முதல் 11ம் இடத்திற்கு மாறும் சூரியன் சுயதொழில் புரிபவர்களுக்கு உரிய பெயர், பணவரவு இரண்டையும் ஈட்டித் தருவார். சுக்ரன் மே 11 முதல் 10 வீட்டில். சில நேரங்களில் திட்டமிட்டபடி வேலைகள் நடக்காமல் சற்றே இழுத்தடிக்கலாம். கலைஞர்கள் தகுதிக்கு மிறிய செயல்பாடுகளிலிருந்தும், உறவுகளிடமிருந்தும் ஒதுங்கியிருப்பது சிறந்தது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகாமல் பார்த்துக்கொண்டால், விரும்பியபடி வளமான வாழ்க்கைய அமைத்துக்கொள்ளலாம். ஜூன் அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28. சூரியன் முதல் 15 நாட்களுக்கு 11ம் இடத்தில் இருப்பதால், வியாபார விருத்தி நன்றாக இருக்கும். 12ம் தேதி முதல் செவ்வாயும் சூரியனோடு இணைவதால், பணியாளர்களின் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் அதிகாரிகள் தரும் முக்கிய பணிகளைத் திறம்பட செய்து முடிக்கும் வாய்ப்பு வந்து சேரும். பிறகு சூரியன் 12ம் இடத்திற்குப் போவதால் நண்பர்களால் தொல்லை நேரலாம். ஒட்டி உறவாடியவர்களின் போக்கிலும் விரும்பத்தகாத மாறுதலிருக்கும். ஜூன் 13 வரை 11ல் புதன். பெண்கள் மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதால், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். பிறகு 12, 1ம் வீடுகளுக்குப் போவதால், வியாபாரிகள் முன் பின் தெரியாதவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்காமலிருந்தால், நஷ்டப்பட வேண்டியிராது. 4ம் தேதி முதல் சுக்ரன் 11ம் வீட்டிற்கு செல்கிறார். கலைகளில் பிரகாசிக்க முடியவில்லையே என்று வருந்தியவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வருகின்ற வாய்ப்புக்களை ஏணியாக்கிக் கொண்டால், உயர்வும், பாராட்டும் நிச்சயம் உண்டு. ஜூன் 6ம் தேதி முதல் ராகு 5ம் வீட்டில். சின்ன விஷயங்களுக்கு சினம் கொள்ளாமல், பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். 11ல் கேது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு, உயர் அதிகாரிகளின் கருணை இரண்டும் வேலையில் இருப்பவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். ஜூலை அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 24, 27, 28. 24ம் தேதி செவ்வாய் 12ம் வீட்டில். நோய்களுக்கு நீங்களே மருந்துகளை தேடாமல், தகுந்த மருத்துவரை அணுகுதல் நல்லது. பணியில் இருக்கும் பெண்கள் பெயரளவில் இருந்த சலுகைளை அனுபவித்து மகிழ கடும் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உங்களால் ஆதாயம் அடைந்தவர்கள் உங்களைப் பாராட்டத் தயங்கி ஓடி ஒளிவார்கள். புதன் 19ம் தேதி வரை உங்கள் ராசியில். வாழ்க்கைத் துணையோடு சின்ன விஷயங்களுக்காக சச்சரவில் இறங்காமலிருந்தால் அமைதி என்பது அனைவர் மனதிலும் இருக்கும். மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராமல் செயல்பட்டால், ஒளிந்திருந்த திறமைகள் மீண்டும் சுடர்விட ஆரம்பிக்கும். பிறகு அவர் 2ம் வீட்டுக்குப் போவதால், பலனை எதிர்பாராமல் கடமையை செய்து வரும் உங்களுக்கு பாராட்டுகள் தானே வந்து சேரும். சூரியன் 12ம் இடத்திலும் உங்கள் ராசியிலும் நிற்பதால், மனக் குழப்பம் உங்களின் திறமையை பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுதல் அவசியம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் கிடைத்தவரை லாபம் என்று சுருட்டிக் கொள்பவர்களின் உறவைத் தவிர்த்தல் நலம். இளம் பெண்கள் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாய் இருந்தால், மனக் கவலைக்கு ஆளாக வேண்டாம். கூட்டு முயற்சி மூலம் செய்யும் செயலில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்ட, இந்த மாதம் 2ம் தேதி முதல் 12 மற்றும் 1ம் வீடுகளுக்கு உரிமை கொண்டாடும் சுக்ரன் துணையிருப்பார். கலைஞர்களுக்கு பொது விழாக்கள், விருந்து ஆகியவற்றின் மூலம் தேடி வரும் வாய்ப்புகளுக்கேற்ற வரவும் இருக்கும். ஆகஸ்ட் அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 19, 22, 23, 24, 28, 31. சூரியன் இந்த மாதம் 1, 2 வீடுகளில் நிற்பதால் முதலில் சிறிது தடைகள் இருந்தாலும், கேட்ட இடத்திலிருந்து கேட்ட உதவி தடையின்றி கிடைப்பதால், வியாபாரிகளின் புதிய முயற்சிகள் புதுமையாகவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் அமையும். வேலையில் இருப்பவர்கள் அதிகாரிகளின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமாவார்கள். செவ்வாய் 12ல். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பழைய வழக்கு விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும் வாய்ப்பு உள்ளதால், ஆரவாரமின்றி அமைதியாய் உங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி வாருங்கள். புதன் 4ம் தேதியிலிருந்து வக்ரம் அடைந்து மீண்டும் உங்கள் ராசிக்கு சென்று விடுவதால், வேலையாட்களால் அனுகூலம் என்பது அவ்வளவாய் இராது. 27ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி பெற்று உங்கள் ராசியிலேயே நிற்பதால் பங்குச் சந்தையில் அதிகப் பணம் முடக்காமலிருப்பதே புத்திசாலித்தனம். பொது வாழ்வில் இருப்பவர்கள் கிடைக்கக்கூடிய சின்ன சலுகைகளை முறையாக பயன்படுத்தி வர, எப்போதும் உங்கள் செல்வாக்கு நிலைத்திருக்கும். மேலும் உதவி செய்பவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. 17ம் தேதி முதல் சுக்ரன் 2ம் வீடு போவதால், வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுக்கும். கணினி பயன்பாட்டில் உங்கள் திறமை மேலும் சிறப்படையும். பெண்கள் சுபச்செலவுகளுக்காக பணம், நேரம் இரண்டையும் மகிழ்வுடன் செலவழிக்கும் வாய்ப்பு வரும். செப்டம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 15, 16, 19, 24, 25, 28. மாதம் முன் பகுதி வரை சூரியன் 2ம் வீட்டில். அரசுக்கு பணம் செலுத்திய ரžது ஆகியவற்றை பத்திரமாக வைத்தால், சுய தொழில் புரிபவர்கள் வேண்டிய சலுகைகளைத் தாமதமின்றிப் பெறலாம். மாதம் பின் பகுதி முதல் சூரியன் சாதகமான 3ம் வீட்டுக்குப் போவதால், பங்குதாரர்களின் சகாயத்தால், வியாபாரம் žராக சென்று கொண்டிருக்கும். செவ்வாய் 9ம் தேதி முதல் 1ம் வீட்டிற்கு மாறுவதால், பெண்கள் காட்டும் சொல் சிக்கனம் பிரச்சினைகளை பெரிதாகாமல் தடுக்கும். புதன் 4ம் தேதி முதல் சிம்மத்திற்கு மாறுகிறார். எவ்வளவுதான் முயன்றாலும் முகம் காட்டாமலிருந்த வாய்ப்புகள் இப்பொழுது கலைஞர்களைத் தேடி வருவதுடன் புகழேணியிலும் ஏற்றிவிடும். மாணவர்களின் பேச்சில் உள்ள தெளிவு பிறரின் மதிப்பையும், நட்பையும் சம்பாதித்துத் தரும். 22ம் தேதி முதல் புதன் 3ம் வீட்டுக்கு மாறுவதால் வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது மூலம் நஷ்டத்தைக் குறைத்துக்கொள்ள முடியும். சுக்ரன் 10ம் தேதி முதல் 3ம் வீட்டுக்கு செல்வதால், பழைய நண்பர்களுடன் மகிழ்வாக பொழுது செல்லும். விருந்து உபசரிப்புகளினால், இல்லத்தில் கலகலப்பும், அதற்கேற்ற செலவுகளும் கூடும். அக்டோபர் அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 12, 14, 19, 21, 23, 28, 30. இந்த மாதம் சூரியன் 3, 4 வீடுகளில் நிற்பதால், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு முதல் பகுதியில் பாராட்டும், பரிசும் வந்து சேரும். ஆனால் மாதப் பின் பகுதியில் சொற்சிக்கனத்தை உறுதியாய் கடைபிடித்தால், வெளிவட்டாரம் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு கலைத் திறமைக்குரிய கௌரவம் கிடைத்தாலும், சில கடும் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 1ல் இருக்கும் செவ்வாய் அக்டோபர் 30 முதல் 2ம் வீட்டிற்கு மாறுவதால், வியாபார பாக்கிகளை வசூலிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. அத்துடன் கடையில் உள்ள பொருளின் பாதுகாப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துவது முக்கியம். பணியிடத்தில் கோபதாபங்களுக்கு இடம் கொடாமல் இருந்தால், உங்கள் வேலைகள் தொய்வின்றி நடந்தேறும். 9ம் தேதி முதல் 4ம் வீட்டிற்கு போகும் சுக்ரன் வியாபாரிகள் உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும் அந்தஸ்தும் பெற துணையிருப்பார். 29ம் தேதி முதல் சுக்ரன் பஞ்சம வீட்டிற்கு மாறுவதால், கலைஞர்களின் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் சிறந்த முறையில் வடிவாக்கம் பெறுவதுடன், நல்ல பெயரையும் வாங்கித் தரும். புதன் 9ம் தேதி முதல் 4ம் வீட்டில். 29ம் தேதி முதல் 5ம் இடத்தில். பெண்கள் பொறாமைக் குணம் கொண்டவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் யாரையும் வீணாகப் பகைக்காமலிருந்தால், வெற்றி உங்களுக்குத்தான்! மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் பட்டும்படாமலும், இருந்தாலே தொல்லைகள் தானே விலகி விடுவதுடன் உங்கள் மனமும் தெளிவு பெற்றுவிடும். அத்துடன் சேரிடம் அறிந்து சேர் என்பதை நட்பு விஷயத்தில் கடைப்பிடிப்பது நல்லது. நவம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 10, 15, 19, 24, 28. சூரியன் 4, 5 வீடுகளில். பெண்கள், அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். வீட்டில் வீண் விவாதங்கள் தோன்றாது. உயர் பதவி வகிப்பவர்கள், முக்கிய கோப்புகளை நேரடி கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம். பின் பாதியில் வெற்றியை அள்ளித்தரும் 6ம் வீட்டில். தொழில் நிரந்தமின்றி அலைந்தவர்கள், ஓரிடத்தில் அமர்ந்து தொழில் புரியும் வாய்ப்பு தானாகவே உருவாகும். செவ்வாய் இந்த மாதமும் சிம்மத்தில்தான் நிற்கிறார். புதிய இடங்களுக்கு செல்பவர்கள் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்களை பத்திரமாக வைக்கவும். சனி 14ம் தேதி முதல் 4ம் இடமான துலாத்திற்கு மாறுவதால் அலுவலக விவகாரங்களில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள். பணிகளை திருத்தமாகச் செய்வதால் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சுயதொழில் புரிபவர்கள் சின்னப் பிரச்சினைகளுக்காக அதிகப் பணம் செலவழிக்க நேரிடும். புதன் வக்ரம் அடைந்தாலும், 5ம் இடத்தில்தான் நிற்கிறார். மாணவர்கள் கல்வி சம்பந்தமான செய்முறைகளில் கவனமாக இருந்தால், வீண் அபராதம் கட்டுவதைத் தவிர்த்துவிடலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வலிய உறவு கொண்டாட வரும் பகைவரிடமிருந்து விலகி இருந்தால், சங்கடங்களிலிருந்து எளிதில் விடுபட முடியும். சுக்ரன் 3ம் வாரம் முதல் 6ம் இடத்திற்கு செல்கிறார். வியாபாரிகள் நிலுவையில் இருந்த சலுகைகளைப்பெற, நேரான வழியில் முயற்சி செய்வதே புத்திசாலித்தனமாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு நடக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம். டிசம்பர் அதிருஷ்ட நாட்கள்: 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28. இந்த மாதம் சூரியன் முன் பகுதியில் 5ம் வீட்டில். நீங்கள் எதிர்பார்த்த நட்போடு இனிமையாக பொழுது போனாலும் பண பரிமாற்றம், உணவுப் பரிமாற்றம் ஆகியவற்றை இதமாக மறுப்பது புத்திசாலித்தனமாகும். பின் சூரியன் 6ம் வீட்டுக்கு மாறுவதால், குடும்ப ஒற்றுமை பொது வாழ்வில் இருப்பவர்களின் ஆக்கப்பூர்வமான பணிக்கு அடித்தளமாக அமையும். செவ்வாய் இந்த மாதமும் சிம்மத்தில் நிற்பதால், பெண்களுக்கு ஓய்வின்றி பணியில் ஈடுபடும் சூழலிருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாய் இருக்கவும். பிள்ளைகளால் அதிக செலவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களின் போக்கை கவனித்து வாருங்கள். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாய் நடப்பவர்க்கு எந்த தொந்தரவும் இராது. தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு, உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை இருக்கும். புதன் பஞ்சம வீட்டில். பழைய பின்னடைவுகள் நீங்க, வியாபாரிகள் வியாபாரத்தில் முழு கவனம் செலுத்தி வருவது முக்கியம். அடிக்கடி எரிச்சல் மற்றும் கோபப்படுவதைத் தவிர்த்து காரியத்தில் கண்ணாக இருப்பவர்க்கு, அதிகாரிகளின் ஆதரவு எப்போதும் உண்டு. சுக்ரன் 16ம் தேதி முதல் 7ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால், பணியில் இருப்பவர்கள் அலுவலக விழா, விருந்து ஆகியவற்றில் உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். மாணவர்கள் உண்மையே பேசினாலும், இடம் பொருள் அறிந்து பேசினால், அதிக நன்மை பெறலாம். |
|
|
Thappu Seiravangala Mannikirathe Oru Periya Thandanai!
Last Edit: 1 month, 2 weeks ago by Diana.
|
|
Time to create page: 0.36 seconds