|
Welcome,
Guest
|
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Simmam
(1 viewing) (1) Guest
Tips
|
TOPIC: 2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Simmam
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Simmam 1 month, 2 weeks ago #1416
|
22ஜனவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 13, 15, 22, 24, 28, 31. இந்த மாதம் 4, 5 வீடுகளில் தங்கி வரும் சுக்ரன், 8ம் தேதி முதல் 6ம் வீட்டுக்கு செல்லும் செவ்வாய் ஆகிய இருவரும் நன்மை பல தருவார்கள். பொது சேவையில் ஈடுபடும் உங்களின் கரங்களை பலப்படுத்த பெண்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு தகுந்த நேரத்தில் பக்க பலமாக இருப்பார்கள். சூரியன் முன் பகுதியில் 5ல் இருப்பதால், உயர் பதவி வகிப்பவர்கள் ஆரவாரத்திற்கும், ஆடம்பரத்திற்கும் துணை போகாமலிருப்பது நல்லது. பிறகு சூரியன் 6ம் இடத்திற்கு போவதால், உங்களுக்கு பகைவரின் பலம் மணல் கோட்டை போல் கரைந்து விடும். முன்பிருந்த கவலை மாறி மாணவர்களின் மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். 29ம் தேதி வரை புதன் 4, 5 வீடுகளில் நிற்கிறார். பணியில் இருப்பவர்கள் உங்கள் கௌரவத்தை கெடுக்க நினைப்பவர்களை அருகில் அண்ட விடாதீர்கள். பிரச்சினைகள் ஏதும் தலை காட்டாமலிருக்கும். கலைஞர்கள் ஒவ்வாத பழக்கவழக்கங்களுக்கு தலையாட்டாமலிருந்தால், வாழ்க்கையில் கலக்கம் இராது. 30ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டுக்குப் போவதால் எப்படி முடியுமோ என்று மலைப்பாய்த் தோன்றியவை மளமளவென்று முடிந்து விடும். ஆரோக்கியத்தில் இதுவரை இருந்த நலிவு நீங்கி, புதுத்தெம்புடன் வளைய வருவீர்கள். பிப்ரவரி அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 19, 21, 23, 28. சூரியன் முதல் 2 வாரங்களுக்கு 6ம் வீட்டில் பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் அறிவுக் கூர்மையால், முடியாது என்றிருந்த விஷயங்கள் முடிந்து, தங்களுக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொள்வார்கள். பிறகு சூரியன் 7ம் இடம் செல்வதால், வீடு மராமத்து, பராமரிப்பு ஆகியவற்றில் நம்பகமானவர்களின் உதவியை நாடுவது அவசியம். அரசு தொடர்பான காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியிருக்கும். 15ம் தேதி முதல் செவ்வாயும், 18ம் தேதி முதல் புதனும் 7ம் வீட்டுக்கு மாறுவதால், பெண்கள் உணர்ச்சி வசப்படுவதை குறைத்துக்கொண்டால், உற்சாகமாக இல்லப் பணிகளை செய்ய இயலும். கர்ப்பிணிப் பெண்கள் ஜ“ரணக்கோளாறுக்கு இடம் தராதவாறு மிதமான உணவு வகைகளை உண்பது நல்லது. 5ல் இருந்து மாணவர்களின் உள்ளத்திற்கு உற்சாகத்தைத்தந்து கொண்டிருந்த சுக்ரன் 24ம் தேதி முதல் 6ம் வீட்டுக்கு செல்கிறார். சுய தொழில் புரிபவர்கள் தேவைக்கேற்ற பணத்தைவிட அதிகம் செலவு செய்வதை குறைத்துக்கொண்டால், பொருளாதாரம் சிக்கலாகாமல் இருக்கும். மார்ச் அதிருஷ்ட நாட்கள்: 1, 10, 15, 19, 24, 28. சூரியன் 7, 8 வீடுகளில் பயணம் செய்கிறார். மாணவர்கள் கேளிக்கைகளில் மனத்தை அலைபாய விடாமல், கட்டுப்பாடுடன் இருந்தால், அதிக நன்மைகள் உங்கள் பக்கம் இருக்கும். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் பிரயாணக் களைப்பு உங்கள் பணிகளில் குறுக்கிடாமல் தகுந்த ஓய்வெடுத்த பின் வேலைகளைத் தொடர்வது நல்லது. செவ்வாய் 25ம் தேதி முதல் அஷ்டம வீட்டுக்கு மாறுகிறார். பெண்கள் படபடவென்று பேசுவதைக் குறைத்தால்தான், பிறரின் கருத்துக்களை ஊன்றி கவனிக்க இயலும். 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை 8ல் இருக்கும் புதன் மந்த கதியில் இருந்த வியாபாரத்தை முடுக்கிவிடுவதால் வியாபாரிகள் சுறுசுறுப்புடன் இயங்குவார்கள். பிறகு புதன் 9ம் இடம் போகிறார். பிறர்க்கு உதவப்போய் அங்கும் இங்கும் அலைய நேரிடும். அத்துடன் கொடுக்கல் வாங்கலில் குளறுபடிகள் நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுக்ரன் 22ம் தேதி முதல் 7ம் இடம் வந்துவிடுகிறார். வெளியிடம் செல்லும் கலைஞர்கள் சபலங்களுக்கு அடிமையாகாமலிருப்பது நல்லது. ஏப்ரல் அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28. சூரியன் 8, 9 வீடுகளில் தங்குவதால், மாணவர்களும், பெண்களும் வேண்டாத எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடாமல் இருந்தால், வாழ்க்கை மகிழ்வாகச்செல்லும். வியாபாரிகள் பண விவகாரங்களில் அலட்சியமாக இருந்தால், பங்குதாரர்களிடையே அதிருப்தியும், முணுமுணுப்பும் தோன்றி மறையும். செவ்வாய் அஷ்டம வீட்டில், பொதுவாழ்வில் உள்ளவர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள மறைமுக வழிகளுக்கு மாறி விடாதீர்கள். லாபத்தைவிட நஷ்டம்தான் கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். 8ல் இருக்கும் புதன் ஏப்1 முதல் புதன் வக்ரம் ஆகி 23ல் வக்ர நிவர்த்தி பெற்று விடுகிறார். பணியில் இருப்பவர்கள் கவனத் தடுமாற்றத்துக்கு இடமின்றி வேலைகளை விரைந்து முடிப்பார்கள். சுக்ரன் 16ம் தேதி முதல் 8ம் இடம் செல்கிறார். கலைஞர்களுக்கு மனதுக்கு பிடித்த ஆடை வகைகளை அணியும் வாய்ப்பும், புதிய வாகனங்களில் பவனி வரும் யோகமும் உண்டாகும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் ரீதியான விஷயங்களில் அக்கறையோடு நடந்துகொள்வதால், அதிக லாபத்துடன் புதிய அறிமுகங்களும் கிட்டும். மே அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 24. 7ம் தேதி முதல் குரு 9ம் இடத்திற்கு செல்வதால், திறமைக்குரிய அங்கீகாரமும், பாராட்டும், உங்களை புதிய முயற்சிகளில் ஈடுபடுத்தும். சூரியன் மாத முன் பகுதியில் 9ம் வீட்டில் சுழல்வதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும், நல்ல பெயர் பெறுவதென்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும்! பின் சூரியன் தசம வீட்டில் தங்குகிறார். பொறுப்பான பதவி வகிப்பவர்களுக்கு போட்டிகளின் நடுவே தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நிலை இருந்தாலும், அவர்களுக்கு உரிய கௌரவம் தக்க சமயத்தில் கிடைத்து விடும். மாணவர்கள் சுறுசுறுப்புடன் வேலைகளை முடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 8, 9 வீடுகளில் உலா வரும் சுக்ரன் கலைஞர்களின் மனதில் இருக்கும் சஞ்சலங்களை விரட்டி, சந்தோஷத்தை குடியேற்றுவார். 3ம் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் தவழ்வதால், வீடுமனை வாங்கி விற்பவர்கள் மனிதர்களின் தரமறிந்து செயல்படுவது புத்திசாலித்தனம். புதன் 11ம் தேதி 9ம் வீட்டுக்கு மாறுவதால், முதியவர்கள் உணவு பழக்க வழக்கங்களில் விஷப்பரீட்சைகளை மேற்கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் சில நேரங்களில், அடுத்தவரின் வேலையையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்யும் நிலை நிலவும். ஜூன் அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 11, 15, 19, 20, 28, 29. சூரியன் 10, 11 வீடுகளில் பிரகாசிப்பதால், பிள்ளைகளால் உங்கள் மகிழ்ச்சி பெருகும். வியாபாரிகள் வாய்ப்புகளுக்கேற்ற வரவு வந்த வண்ணம் இருப்பதோடு நிலுவையில் இருந்த வியாபாரச் சலுகையும் தக்க சமயத்தில் வந்து சேரும். செவ்வாய் 9, 10 வீடுகளில் இருப்பதால், பெண்கள் தேவையற்ற விஷயங்களுக்காக மனதை அலட்டிக்கொள்வார்கள். சிறிய உடல் உபாதைகள் உங்கள் பணியில் வேகத்தை குறைக்காமல் இருக்க, பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைப்பது அவசியம். இந்த மாதம் புதன் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை 10, 11 வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் மாணவர்களின் உண்மையான திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய நட்பும், அன்புப் பரிமாற்றமும் பணியில் இருப்பவர்களுக்கு மகிழ்வைத் தரும். பிறகு புதன் 12ம் வீட்டில் மறைவதால், பத்திரிக்கைத் துறையில் இருப்பவர்கள் சில சமயங்களில், தேவையான செய்திகளை, சற்று சிரமப்பட்டு சேகரிக்க வேண்டியிருக்கும். சுக்ரன் 4ம் தேதி முதல் தசம வீட்டில் தஞ்சம் புகுவதால், ஸ்திரச் சொத்துக்களின் சேர்க்கைகக்‘கன முயற்சி சற்று தள்ளிப்போகும். 6ம் தேதி முதல் ராகு 4ம் வீட்டில். ஆணவத்துக்கு இடமின்றி பணிவுடன் நடந்துகொண்டால், உங்கள் பதவியுடன் உங்கள் அந்தஸ்தும் உயரும். கேது பகவான் 10ம் இடத்திற்கு மாறுகிறார். சுயதொழில் புரிபவர்கள் வெறும் வார்த்தைகளை நம்பி பிறருக்கு பணம் கொடுப்பதை அறவே தவிர்த்துவிடவும். ஜூலை அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28. சூரியன் முன் பகுதியில் 11ம் வீட்டில் நிற்கிறார். நண்பர்களிடையே உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். சக ஊழியர்கள் உங்கள் திறமையையும், அருமையையும் புரிந்து கொள்வார்கள். பின் சூரியன் 12ம் வீட்டில் பதுங்குவதால், பெண்கள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி கவனமாய் இருந்தால், வேண்டிய பணப்புழக்கம் கையில் இருக்கும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உஷ்ணம் தொடர்பான உபாதைகள் அவ்வப்போது வந்து போகும். செவ்வாய் 24ம் தேதி வரை 10ம் வீட்டில், புதிதாய் வேலைக்கு சேர்ந்துள்ளவர்களுக்கு எதிலும் திருப்தியற்ற நிலைமை நிலவும். பின் செவ்வாய் 11ம் வீட்டில் நடை போடுவதால், உடனிருப்பவர்கள் உங்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் முக்கியமான பணிகளை வெற்றியுடன் முடிப்பார்கள். புதன் 12 மற்றும் 1ம் வீடுகளில் சுழலுவதால், வியாபாரிகளும் பாக்கிகளை வசூலிக்க பம்பரமாய் சுழல வேண்டியிருக்கும். சுக்ரன் 2ம் தேதி முதல் 11, 12 வீடுகளில் உலா வருவதால், கலைஞர்கள் விரும்பிய பலன் கிடைப்பதோடு சொந்த பந்தங்களால் மதிக்கப்படும் சிறப்பான சூழலும் உண்டாகும். ஆகஸ்ட் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 24, 27, 28. சூரியன் 12, 1 வீடுகளில் நிற்பதால், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வீண் அபவாதம், அலைச்சல் ஆகியவை தோன்றி மறையும் வாய்ப்பிருப்பதால், வெளிவட்டாரப் பழக்கங்களைக் குறைத்துக்கொள்ளவும், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தொழிலாளர் பிரச்சினைகளில் சூடான வாக்குவாதம், முன்கோபம் ஆகியவற்றிற்கு இடம் தராமல், நிதானமாக செயல்படுவது நல்லது. இந்த மாதம் முழுவதும் செவ்வாய் 11ம் வீட்டில் நிற்பதால் விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் உயரும். நிறுவன வளர்ச்சி நன்றாக இருக்கும். பெண் பணியாளர்கள் உங்களின் வியாபார வளர்ச்சிக்கு துணையாய் இருப்பார்கள். 17ம் தேதி முதல் 1ம் வீட்டிற்கு மாறும் சுக்ரன் கலைஞர்களை விருந்து, வேடிக்கை ஆகியவற்றில் கலந்துகொள்ளச் செய்து அமர்க்களப்படுத்திவிடுவார்! புதன் 4ம் தேதியிலிருந்து வக்ரம் அடைந்து மீண்டும் 12ம் வீட்டுக்கு சென்று விடுவதால், சுய தொழில் புரிபவர்களுக்கு வேலையாட்களால் அனுகூலம் என்பது அவ்வளவாய் இராது. 27ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி பெற்று 12ம் இடத்திலேயே நிற்பதால் மாணவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், உங்களுக்கு வரும் நல்ல பெயரை மற்றவர் தட்டிக்கொண்டு போவார்கள். செப்டம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 19, 22, 24, 28. சூரியன் 1, 2 வீடுகளில் சஞ்சாரம் செய்வதால், பெண்கள் பொருளாதார ரீதியாக, பிறருக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசாமலிருப்பது நலம். அதிக நேரம் கணினியின் முன் வேலை செய்பவர்கள் கண்களைப் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தி வருவது முக்கியம். செப்டம்பர் 9ம் தேதி முதல் செவ்வாய் 12ல் பணியில் இருப்பவர்கள் காசோலைகளின் பயன்பாட்டில் கருத்துடன் இருந்தால், பொருளாதாரச் சிக்கல் ஏதும் எழாது. வியாபாரிகள் வங்கிக்கான கடன் தொகைகளை குறித்த கெடுவுக்குள் செலுத்திவிட்டால், அபராதம் கட்டாதவாறு தப்பித்துக்கொள்ளலாம். புதன் 1ம் வீட்டில் 21ம் தேதி வரை இருப்பதால், சுயதொழில் புரிபவர்கள் பொருள் சிக்கனத்தோடு சொல் சிக்கனத்தையும் மேற்கொள்வது நன்மையாக இருக்கும். புகழேணியில் இடம் பெற வேண்டும் என்ற மாணவர்களின் ஆசையை 22ம் தேதி முதல் 2ம் இடம் செல்லும் புதன் நிறைவேற்றி வைப்பார். இளைஞர்கள் வாழ்வில் திருப்பங்களும், விறுவிறுப்புக்கும் நிறைய இடமிருக்கும். சுக்ரன் 10ம் தேதி முதல் 2ம் வீட்டில் வசிப்பதால், கலைஞர்கள் பெறும் புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும் விதமாக இருக்கும். சேமிப்பால் சுய தொழில் புரிபவர்களின் பொருளாதாரம் žராக இருக்கும். அக்டோபர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 15, 16, 19, 24, 25, 28. ஆதவன் முன் பகுதியில் 2ம் வீட்டில் பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும். பின் சூரியன் 3ம் வீட்டில் பெண்கள் மனதில் இருந்த ஏக்கம் மாறி, மீண்டும் மத்தாப்பாய் வாழ்க்கை ஒளிரத் துவங்கும். 30ம் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசியில் பொது வாழ்வில் இருப்பவர்கள் நாவடக்கத்தை மேற்கொண்டால், கருத்து வேற்றுமை, கசப்பான அனுபவம் ஆகியவை தலைகாட்டாமல் இருக்கும். புதன் 3, 4 வீடுகளில் சுழலுவதால், ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தவர்கள் காரியம் முடிந்ததும் கண்டும் காணாதவாறு நழுவும் சூழல் நிலவும். பங்குச் சந்தையில் ஒருவித நிச்சயமற்ற நிலைமை நிலவுவதால், பண முதலீட்டில் அதிக அவசரம் வேண்டாம். சுக்ரன் இந்த மாதம் 3, 4 வீடுகளில் இருப்பதால் அவர் தன் பங்குக்கு ஆடை, ஆபரணம் போன்றவற்றை வர்த்தகம் செய்பவர்களுக்கு அதிக லாபத்தை அள்ளித்தருவார். நவம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 19, 21, 23, 28, 30. சூரியன் 3, 4 வீடுகளில் பயணம் செய்வதால் மாத முன் பாதியில் பெண்களுக்கு தான தர்மம் செய்வது, ஆலயத் திருப்பணியில் பஙகேற்பது போன்ற நற்செயல்கள் செய்யும் பேறு கிட்டும். பிறகு சூரியன் 4ம் இடத்தில் நிற்பதால், பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சில நேரங்களில் அதிக அலைச்சலும், சரிவர உண்ணமுடியாத நிலையும் இருக்கும். 4ம் வீட்டில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் அடைகிறார். உங்கள் பொறுமையை சோதிக்கும் விதமான நிகழ்ச்சிகள் நடைபெறலாம். எனவே பொறுமை காப்பது அவசியம். 21ம் தேதி முதல் சுக்ரன் 5ம் வீட்டுக்கு போவதால், சுய தொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி அடைவார்கள். பணத்தேவையால் தாமதப்பட்டுக்கொண்டிருந்த அனைத்தும் துரித கதியில் நடைபெறும். செவ்வாய் உங்கள் ராசியில். மாணவர்கள் வேண்டாத எண்ணங்களை வளரவிடாமல், நல்ல பொழுது போக்குகளில் உங்கள் கவனத்தை திசைத் திருப்புங்கள். மனம் தெளிவடையும். சனி 14ம் தேதி முதல் 3ம் இடத்திற்கு செல்கிறார். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாய் முடியும். டிசம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 10, 15, 19, 24, 28. சூரியன் 4, 5 வீடுகளில் தங்கிப் போவதால் வியாபாரிகள் கூட்டாளிகளுடன் பிணக்கு ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டால், மனக்கஷ்டம் தோன்றாது. பெண்கள் குடும்ப நலத்திலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருந்தால், சச்சரவுகளும் மருத்துவச் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். செவ்வாய் இந்த மாதமும் உங்கள் ராசியில் பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்சினைகளை கவனித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும், ஆறுதலையும் வழங்கி வந்தால், அவர்களின் பாதை பிறழாமல் இருக்கும். 14ம் தேதி வக்ர நிவர்த்தி பெறும் புதன் இந்த மாதம் 4ம் வீட்டிற்குள்ளேயே நகர்ந்து கொண்டிருப்பதால், சுயதொழில் புரிபவர்கள் வரவு செலவுகள் வரைமுறைக்குள் இருக்குமாறு பார்த்துக்கொண்டால், பிறரிடம் கைமாற்றாய் பணம் பெற வேண்டிய அவசியமாகிறது. மாணவர்கள் ஞாபகமறதிக்கு இடம் தராமல், கருத்தூன்றி படித்துவந்தால், அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெற்றிருக்கும். சுக்ரன் 16ம் தேதி முதல் 6ம் இடத்தில் அமர்வதால், கலைஞர்கள் கடன் அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதிலும் கணக்காக இருந்தால், கடன் தொல்லையை கட்டுக்குள் வைக்க இயலும். |
|
|
Thappu Seiravangala Mannikirathe Oru Periya Thandanai!
Last Edit: 1 month, 2 weeks ago by Diana.
|
|
Time to create page: 0.33 seconds