|
Welcome,
Guest
|
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Virushig
(1 viewing) (1) Guest
Tips
|
TOPIC: 2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Virushig
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Virushig 1 month, 2 weeks ago #1419
|
Virushigam
ஜனவரி அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 22, 24, 28, 31. 1, 2 வீடுகளில் வலம் வரும் சுக்ரனால், பெண்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதோடு பிள்ளைகளின் ஆதரவும் மனதுக்கு இதமாய் இருக்கும். 8ம் தேதி முதல் உங்கள் ராசிநாதனான செவ்வாய் 3ம் வீட்டில் நிற்பதால், மாணவர்களின் ஞாபக சக்தியும், புத்திக் கூர்மையும் அவர்களின் வளர்ச்சிக்கு வித்தாய் அமையும். பெண்கள் மனதில் இருந்த கலக்கம் மாறி, புதிய உத்வேகத்துடன் பணிகளை முடிப்பார்கள். சூரியன் மாத முன் பகுதியில் 2ல் பொது வாழ்வில் இருப்பவர்கள் தைரியம் குறையாது. தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாய் இருந்தால், தடைகள் யாவும் படிக்கற்களாய் மாறிவிடும். மாத பின் பகுதியில் 3ல் இருக்கும் சூரியன் அலுவலகம் சென்று வர உதவும் வாகன வசதிகளைப் பெருக்குவார். புதன் 7ம் தேதி முதல் 29ம் தேதிவரை 2ம் இடத்தில் நிற்பதால் பணியில் இருப்பவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட உயரதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால், உங்களின் திறமையால், மீண்டும் உயர் நிலையை அடைவீர்கள். பிறகு புதன் 3ம் இடம் செல்வதால், கலைஞர்கள் தேவையற்ற விஷயங்களுக்காக அலையும் சூழல் உருவாகலாம். பிப்ரவரி அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 19, 24, 25, 28. சூரியன் மாத முன் பகுதியில் 3ம் வீட்டில் உலா வருவதால், மனை வாங்கிப்போட்டும் வீடு கட்ட முடியவில்லையே என்ற ஏக்கம் தீரும் விதத்தில் வீடு கட்டும் விஷயங்கள் மளமளவென்று நடக்கும். பிறகு சூரியன் 4ம் இடம் செல்வதால், மாணவர்கள் 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்றிராமல், பழக்க வழக்கங்களிலும், உணவு வகைகளிலும், கட்டுப்பாடாய் இருப்பது அவசியமாகும். செவ்வாயும் 15ம் தேதி முதல் 4ம் வீட்டிற்கு நகர்வதால், பணியில் இருப்பவர்கள் வேலைகளை சேரவிடாமல் உடனுக்குடன் முடித்து, உயர் அதிகாரிகள் உங்களை கண்டிக்கும் சூழல் எழாதவாறு உங்கள் செயல்பாடுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. புதனும் 15ம் தேதி முதல் 4ம் வீட்டில் இருக்கும் செவ்வாயோடு இணைவதால், வியாபாரிகள் கடன் நிலவரத்தையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டால், காரியங்கள் நஷ்டமாகாது. கலைஞர்களின் உழைப்பிற்கும், அபிவிருத்திக்கும் 2, 3 வீடுகளில் வலம் வரும் சுக்ரன் பலமாக விளங்குவதால், கலைஞர்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் லாபகரமாய் அமையும். மார்ச் அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 19, 21, 23, 28, 30. சூரியன் 4, 5 வீடுகளில் நிற்பதால், பெண்கள் கடன் வாங்கி, வீண் செலவு செய்தல், தேவையற்ற பொருட்களை வாங்குதல் ஆகியவற்றை தவிர்த்தல் நலம். மாணவர்கள், பாடங்களை கருத்துடன் படித்தால், மறதி என்பது இருக்காது. செவ்வாய் இந்த மாதம் 4, 5 வீடுகளில் சுற்றுவதால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற, பொறுமையாக செயல்படுவது அவசியம். அத்துடன் எவ்வளவு நெருக்கமான நண்பரென்றாலும், பண விஷயங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை தவிர்த்தல் நலம். புதன் 6ம் தேதி முதல், 27ம் தேதி வரை 5ம் வீட்டில் நிற்பதால், பெண்கள் தங்கள் மன வருத்தங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும். பிறகு புதன் 6ம் இடம் செல்வதால், கலைஞர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். உங்கள் திறமையைப் புறக்கணித்த அதிகாரிகள் மீண்டும் முக்கிய பொறுப்புக்களை உங்கள் வசம் தர முன் வருவார்கள். சுக்ரன் 3, 4 வீடுகளில் உலா வருவதால், வியாபாரிகளைத் தேடி வரும் வெளிநாடு வாய்ப்புகள் மூலம் கணிசமான லாபம் இருக்கும். ஏப்ரல் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 15, 19, 24, 28. சூரியன் முன் பகுதியில் பஞ்சம வீட்டில். பொது வாழ்வில் உள்ளவர்கள் நல்வழி காட்டும் நண்பர்களையும், உறுவினர்களையும் தங்கள் அருகில் தக்க வைத்துக்கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும். பிறகு சூரியன் 6ம் இடம் போகிறார். வியாபாரிகள் எதிர்பார்த்தவைகளில் வரும் அதிக வரவால் பழைய கடன்களை தீர்க்க தேவையான பணம் கிடைக்கும். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் 5ம் இடத்தில் நிற்பதால், மாணவர்கள் கிடைக்கின்ற அருமையான வாய்ப்பை தகுந்த விதத்தில் ஏணியாகப் பயன்படுத்திக்கொண்டால், கல்வியிலும், எதிர்காலத்திலும் உயர்வு நிச்சயம். 6ல் இருக்கும் புதன் ஏப்1 முதல் புதன் வக்ரம் ஆகி 23ல் வக்ர நிவர்த்தி பெற்று விடுகிறார். உற்பத்திக்கான பொருள்கள் தக்க சமயத்தில் கிடைப்பதால் சுய தொழில் புரிபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சுக்ரன் 16ம் தேதி முதல் பஞ்சம இடத்திற்கு போவதால், பழைய பிணக்குகள் தீர்ந்து, சக கலைஞர்கள் கலைஞர்களுக்கு உரிய தங்கள் ஒத்துழைப்பை நல்குவார்கள். பணியில் இருப்பவர்களுக்கு மறைந்திருந்த திறமைகளை மீண்டும் மெருகேற்றி கெள்ள நல்ல வாய்ப்பு வரும். மே அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 10, 14, 15, 19, 23, 24, 28. இந்த மாதம் சூரியன் மாத முன் பகுதியில் 6ம் இடத்தில் நிற்பதால், பிரிவினையில் இருந்த பூர்வீகச்சொத்து உங்கள் வசமாகும். சூரியன் 7ம் இடம் போவதால், சுபநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளுக்கான செலவை சரி செய்ய புதிய கடன் வாங்கும் நிலை இருக்கும். செவ்வாய் 3ம் தேதி முதல், 6ம் இடத்திற்கு மாறுவதால், பிள்ளைகளின் ஏற்றத்திற்காக நீங்கள் பட்டபாடுக்கு நல்ல பலனிருக்கும். பாராமுகமாய் இருந்த உறவும், நட்பும் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வமாய் இருப்பார்கள். இந்த மாதம் புதனும் 11ம் தேதி முதல் 6ம் வீட்டில் அமர்வதால், பெண்கள் உறவுகளின் முகம் கோணாமல் நடந்து கொள்வதன் மூலம் பல சலுகைகளைப் பெறுவதுடன், அவர்களுக்கும் உதவி மகிழ்வார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு சிறிய அளவில் வந்து கொண்டிருந்த லாபம் அதிகமாக வருவதுடன், சொந்த இடம் வாங்குவதற்கும் வழி வகை செய்யும் விதமாக சந்தர்ப்பங்கள் அமையும். சுக்ரன் 11ம் தேதி முதல், 6ம் இடத்திற்கு செல்வதால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் பக்குவமாகப் பேசி உங்கள் காரியங்களை சாதித்துக்கொண்டால், பாதி பிரச்சினைகள் தானே அடங்கி விடும். கலைஞர்கள் வீண் சகவாசத்தைப் தவிர்ப்பது அவசியம். இந்த மாதம் குரு பகவான் 7ம் தேதி முதல் 6ம் இடத்திற்கு செல்கிறார். பணியில் இருப்பவர்கள் பணப்புழக்கத்தில், விதிமுறைகளை கடைபிடிப்பதில் கவனமாக இருப்பது முக்கியம். ஜூன் அதிருஷ்ட நாட்கள்: 1, 9, 10, 15, 18, 19, 24, 27, 28. சூரியன் 7, 8 வீடுகளில் நிற்பதால், யாரிடமும் வீண் விவாதத்தில் ஈடுபடாமல் அமைதியாய் உங்கள் பணியை தொடர்வது நல்லது. வியாபாரிகள் சற்று சிரமப்பட்டு நிலுவைத் தொகையை பெற வேண்டியிருக்கும். செவ்வாய் 12ம் தேதியிலிருந்து 7ம் இடத்திற்கு மாறுவதால், பெண்கள் எந்த சூழலிலும், கோபம் தலைக்கேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்வு இனிமையாக இருக்கும். பணியில் இருப்பவர்கள் வேலைகளை தாமதப்படுத்தாமல் உடனுக்குடன் முடிப்பது புத்திசாலித்தனம். புதன் 1ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை 7ல் இருப்பதால், மாணவர்கள் அதிக நேரம் கேளிக்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றில் நாட்டம் கொள்ளாமலிருந்தால், பாடங்களில் பின் தங்கியிருக்கும் நிலை ஏற்படாமலிருக்கும். பிறகு 27ம் தேதி வரை புதன் அஷ்டம வீட்டில் சுழலுவதால், பெண்கள் உறவினரின் மனம் குளிரும் காரியங்களை செய்து பாராட்டுக்களைப் பெறுவார்கள். பிறகு புதன் 9ம் இடத்தில் அமர்ந்து விடுவதால், பணம் சம்பந்த பொறுப்பில் உள்ளவர்கள் விழிப்புடன் இருந்தால், ஏமாற்றத்தைத் தவிர்த்து விடலாம். 6, 7 வீடுகளில் பொது வாழ்வில் உள்ளவர்கள் பேச்சைக் குறைத்து கடமையில் கண்ணாக இருப்பது அவசியம். 6ம் தேதி முதல் ராகு 1ம் வீட்டிலும், கேது 7ம் வீட்டிலும் நிற்கிறார். கலைஞர்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்களில் கலந்திருக்கும் தீயவர்களை இனங்கண்டு ஒதுக்கினால், நன்மை பல உங்களை நாடி வரும். ஜூலை அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 11, 15, 19, 20, 24. சூரியன் 8, 9 வீடுகளில் சுற்றித் திரிவதால், வியாபாரிகள் அரசாங்க அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படலாம். எனவே கணக்கு வழக்குகளை முறையாக வைப்பதில் கவனம் செலுத்துங்கள். செவ்வாய் 7, 8 வீடுகளில் தங்கிச் செல்வதால், வேலையில் இருப்பவர்கள் அடிக்கடி செல்லும் பிரயாணங்களால் அவ்வப்போது தேக உபாதைகள் தலை காட்டாமலிருக்க தேவையான ஓய்வுக்குப் பின் பணிகளைத் தொடருவது நல்லது. 20ம் தேதி முதல் 10ம் வீட்டில் சுழலும் புதன் பல இடங்களிலும் முடங்கிக்கிடந்த வரவை தடையின்றி தருவதால், சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான நிலை இருக்கும். சுக்ரன் இந்த மாதம் 2ம் தேதி முதல், 8, 9 வீடுகளில் உலா வருவதால், கணவன் மனைவி ஒற்றுமை பலப்படுவதுடன், பிள்ளைகளும் உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள். கலைஞர்கள் தங்கள் திறமையின் அடிப்படையில் வரும் வாய்ப்புக்களை பயன்படுத்தி நல்ல வருமானம் பெறுவார்கள். ஆகஸ்ட் அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 28. சூரியன் முன் பகுதியில் 9ல். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு விரோதிகளால் சில தொல்லைகள் ஏற்படலாம். எனவே எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பிறகு 10ம் இடத்திற்கு தாவும் சூரியன் சொல்லை செயலாக்கிக் காட்டுவதில் இருந்த தடைகளை விலக்குவார். 8ல் இருக்கும் செவ்வாய் இந்த மாதம் உதவும் நிலையில் இல்லை என்பதால், நீண்ட தூர பிரயாணங்களை இயன்றவரை தவிர்த்தல் நலம். 10ம் வீட்டில் இருக்கும் புதன் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை வக்ர கதியில் இருந்து 27ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி பெறுகிறார். நண்பர்களிடையே மாணவர்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகி, மீண்டும் உற்சாகமாக செயலாற்றுவார்கள். 9ல் இருந்து கொண்டு கலைஞர்களின் கனவை நிறைவேற்றிய சுக்ரன் 17ம் தேதி முதல் 10ம் வீட்டில் தங்குவதால், பொது விழா, விருந்து ஆகியவற்றில் வரம்பு மீறாமல் நடந்துகொண்டால், வீண் வம்புகளையும், மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம். செப்டம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 24, 27, 28. சூரியன் 10, 11 வீடுகளில் ஒளி வீசுவதால், கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் வியாபாரிகளின் வளர்ச்சிக்கு பக்க பலமாக அமையும். சுய தொழில் புரிபவர்களுக்கு இதுவரை சந்தித்த ஏமாற்றங்களை ஈடுகட்டும் விதமாக பல வாய்ப்புகள் வந்து சேரும். புதனும் 10, 11 வீடுகளில் பயணம் செய்வதால், வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பால், பொருளாதார வளம் சிறப்பாக அமையும். குடும்ப உறவுகள் காட்டும் பொறுப்பாலும், ஆதரவாலும் பெண்கள் தெம்புடன் திகழ்வார்கள். செவ்வாய் 9ம் தேதி முதல் 9ம் இடத்திற்கு செல்வதால், பொறுப்பில் இருப்பவர்கள் கணக்கு வழக்குகளை நம்பகமானவரிடம் ஒப்படைப்பது நல்லது. சுக்ரன் 10ம் தேதி முதல் 11ம் இடத்திற்கு மாறுவதால், கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவார்கள். சுயதொழில் புரிபவர்களுக்கு செலவுகள் குறைந்து வரவு அதிகமாகும். அக்டோபர் அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 14, 15, 19, 22, 24, 28, 31. சூரியன் முன் பகுதியில் 11ல். பிள்ளைகளின் உத்தியோகம் மற்றும் திருமண முயற்சிகள் இனிமையாக முடியும். பின் சூரியன் 12ல். மாணவர்கள் பணம் கட்டிய ரžது, முக்கியமான சான்றிதழ் ஆகியவற்றை மறதிக்கு இடம் கொடாமல் பத்திரமாக வைத்தால், தேவையற்ற தேடுதல்களை தவிர்த்து விடலாம். செவ்வாய் 30ம் தேதி முதல் 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால், பணியில் இருப்பவர்கள் நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் வரை பொறுமை காப்பது அவசியம். புதன் 12, 1 வீடுகளில் தங்குவதால், பொது வாழ்வில் உள்ளவர்கள் முக்கியமான விஷயங்களை நிதானமாகக் கையாளவும். இல்லையெனில் நீங்கள் காட்டும் அவசரத்தினால், சில சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். சுக்ரன் 12, 1 வீடுகளில் அமர்வதால், கலைஞர்களை உற்சாகத்துடன் செயல்பட வைக்க நண்பர்கள் புதிய ஆலோசனையை வழங்குவார்கள். புதுமையான எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் மூலம் உங்கள் கலைத்திறமையும், ரசனையும் வெளிச்சத்திற்கு வரும். நவம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 19, 24, 25, 28. சூரியன் இந்த மாதம் 12, 1 வீடுகளில் தங்குகிறார். நண்பர்கள் ஏட்டிக்குப்போட்டியாக நடந்துகொண்டு எரிச்சலை உண்டாக்குவார்கள். பெண்கள் பொருளாதாரச் சறுக்கல் வராதவண்ணம் செலவுகளில் சிக்கனமாய் இருப்பது அவசியம். செவ்வாய் இந்த மாதம் 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால், ஆசிரியர்கள் ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளாகாமலிருக்க, பொறுமையாய் செயல்படுவது நல்லது. 1ம் இடத்தில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் அடைகிறார். மாணவர்கள் வேண்டாத பழக்க வழக்கங்களுக்கு தூபம் போடுபவர்களின் உறவை துண்டித்து விடவும். 14ம் தேதி முதல் 12ம் வீட்டில் அமரும் சனி பகவான், சுய தொழில் புரிபவர்களின் முயற்சிக்கு உரிய பலனைத் தருவதில் சிறிது கால தாமதத்தைத் தருவார். புதிய வீடு வாங்கும் முயற்சியில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. சுக்ரன் இந்த மாதம் 1, 2 வீடுகளில் வருவதால், கலைஞர்களின் உழைப்பிற்குத்தகுந்த அளவிற்கு பாராட்டு தேடி வரும். டிசம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 14, 19, 21, 23, 28, 30. சூரியன் 1, 2 வீடுகளில் வசிப்பதால், பொது வாழ்வில் உள்ளவர்கள் முன் கோபத்தை வளர விடாமலிருந்தால் அதிக நன்மையும் லாபமும் கிடைக்கும். பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் சிக்கலான விஷயங்களில் நிதானமாகச் செயல்பட்டால், பாதகங்கள் அதிகமிராது. செவ்வாய் இந்த மாதமும் 10ம் வீட்டில் நிற்பதால், பெண்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம், தொழில் போன்ற பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அதிகம் உழைப்பை நல்க வேண்டியிருக்கும். 14ம் தேதி வக்ர நிவர்தி பெறும் புதன் இந்த மாதம் உங்கள் ராசியைப் பிடித்துக் கொண்டிருப்பதால், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதிகாரம், அன்பு இரண்டையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். சுக்ரன் 2, 3 வீடுகளில் நிற்பதால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். முக்கியமானவற்றை கலைஞர்கள் முனைப்புடன் செய்து முடிப்பார்கள். |
|
|
Thappu Seiravangala Mannikirathe Oru Periya Thandanai!
|
|
Time to create page: 0.32 seconds