|
Welcome,
Guest
|
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Thanusu
(1 viewing) (1) Guest
Tips
|
TOPIC: 2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Thanusu
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Thanusu 1 month, 2 weeks ago #1420
|
ஜனவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 15, 19, 24, 28. இந்த மாதம் 12, 1 வீடுகளில் சஞ்சாரம் செய்யும் சுக்ரனின் அருளோடு துவங்குகிறது. பெண்களுக்கு புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். கலைஞர்களுக்கு தொல்லை தந்தவர்கள், தோள் கொடுக்கும் அளவிற்கு நட்பு பாராட்டி வருவார்கள். செவ்வாய் 8ம் தேதி முதல் 2ம் வீட்டில் உள்ளார். வாடகை வீட்டில் உள்ளவர்கள் வேறு இடம் குடிபுகும் போது பொருள்களை இடமாற்றுவதால், சில பொருட்கள் பழுது அடையலாம். முதியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். வாய்ப்பிருந்தால், தேக நலனை நல்ல முறையில் பராமரித்து வரவும். 29ம் தேதி வரை புதன் 12, 1 வீடுகளில் நிற்பதால், மாணவர்கள் கேளிக்கை பக்கம் திரும்பாமல், பாடத்தில் கவனம் செலுத்தி வந்தால், பதற்றமின்றி தேர்வு எழுத இயலும். சுயதொழில் புரிபவர்கள் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு சரக்குகளை வாங்குதல் நலம். வியாபாரிகள் நேர் வழியில் லாபம் சம்பாதிக்கும் முறைகளைப் பின்பற்றுவது அவசியம். சூரியன் 1, 2 வீடுகளில். கலைஞர்கள் பணமுடையைத் தீர்க்க, சேமிப்பை உடைக்க வேண்டியிருக்கும். பிப்ரவரி அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 19, 23, 24, 28. சூரியன் முன் பகுதியில் 2ம் இடத்தில் உள்ளார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வலிய வரும் சண்டையால், தலைவலி கூடும். எனவே எதிலும் விழிப்புடன் இருப்பது அவசியம். உங்கள் மனம் வருந்தும் சொற்களை பிறர் சொன்னாலும், பெண்கள் எதற்கும் அஞ்சாது உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நலம். பிறகு சூரியன் 3ம் இடத்திற்கு மாறுவதால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செயலாற்றும் திறனை உயர்த்திக்கொள்ள வரும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி பலனடைவார்கள். 15ம் தேதி முதல் செவ்வாயும் சூரியனோடு ஜோடி சேர்வதால், பணியில் இருப்பவர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு தங்கள் துறையின் பெருமையை நிலை நிறுத்துவார்கள். 18ம் தேதி முதல் புதன் 3ம் இடத்தில் பதுங்குவதால், மாணவர்கள் சோம்பலின்றி ஆர்வத்துடன் பயின்றால், பாடங்களை எளிதில் கற்க முடியும். வியாபாரிகள், கெடுபிடி காட்டும் அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்வது நலம். சுக்ரன் 24ம் தேதி முதல் 2ம் வீட்டில் ஒளிர்வதால், மங்கிக்கிடந்த கலைஞர்களின் திறமை தக்கசமயத்தில் வெளிச்சத்திற்கு வரும். மார்ச் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 18, 19, 24, 27, 28. சூரியன் முதல் 15 நாட்களுக்கு 3ம் வீட்டில் வலம் வருவதால், பொதுவாழ்வில் உள்ளவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி தங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்வார்கள். பின் சூரியன் 4ம் வீட்டுக்கு நகர்வதால், வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைச் செயல்படுத்த கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுயதொழில் புரிபவர்கள் புதிய திட்டங்களில் உள்ள நிறைகுறைகள் உணர்ந்து, அதற்கேற்றவாறு மாறுதல்களை செய்தால், பலரும் பயனடைய இயலும். செவ்வாய் 25ம் தேதி முதல் 4ம் வீட்டில் தஞ்சம் புகுவதால், பொது வாழ்வில் உள்ளவர்கள் பதற்றமும், மறதியும் இல்லாமல் செயல்பட்டால், புது முயற்சிகள் மனம் விரும்பியவாறு அமையும். இந்த மாதம் புதன் 4, 5 வீடுகளில். கலைஞர்கள் நிபந்தனைகளை அறிந்த பின் புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளுதல் நல்லது. மாணவர்கள் வாக்கில் இனிமை குறையாமல் பார்த்துக்கொண்டால் நல்ல நட்பு பொக்கிஷமாகத் திகழும். அத்துடன் சாதனையாளர் வரிசையில் அமர, இடைவிடா உழைப்பும், தளராத முயற்சியும் தேவைப்படும். சுக்ரன் 2, 3 வீடுகளில் நடை பயிலுவதால், பெண்கள் தங்கள் நுண்ணறிவால், சவால்களை சமாளித்து விடுவதோடு, உறவுகளையும் அரவணைத்து நடந்து கொள்வார்கள். ஏப்ரல் அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 11, 15, 19, 20, 24, 28, 29. சூரியன் 4, 5 வீடுகளில் அமர்ந்துள்ளார். பெண்கள் மனதில் இனம் புரியாத குழப்பம் தலை காட்டும் வாய்ப்பிருப்பதால், தகுந்த ஆலோசனைக்குப்பின் முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்கள் தங்கள் கௌவரத்திற்கு பங்கம் விளைவிப்பவர்களை தங்கள் எல்லையில் நுழைய விடாமல் தடுத்து விட்டால், அதிக நன்மைகள் உங்களை நாடி வரும். செவ்வாய் இந்த மாதமும் 4ம் வீட்டில் நங்கூரமிட்டு நிற்கிறார். பொது வாழ்வில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளின் நடமாட்டத்தில் கண்காணிப்பாய் இருந்தால், அதிக இழப்புகள் இராது. 5ல் இருக்கும் புதன் ஏப்1 முதல் புதன் வக்ரம் ஆகி 23ல் வக்ர நிவர்த்தி பெற்று விடுகிறார். நீங்கள் எவ்வளவுதான் உறவுகளின் நலனில் அக்கறை காட்டினாலும் குற்றம் குறைதான் மிஞ்சும். வியாபாரிகள், சலுகைகளை ஏட்டளவில் தரும் நிறுவனங்களோடு உள்ள தொடர்பைத் துண்டித்தல் நலம். சுக்ரன் 3, 4 வீடுகளில் வட்டமடிப்பதால், கலைஞர்கள் மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். சுக்ரன் நல்ல இடங்களில் இருப்பதால், நல்ல பொருளும், உயர்ந்த ஆடையும் உங்கள் வசமாகும். மே அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 14, 15, 19, 23, 24, 28. சூரியன் முன் பாதியில் 5ம் இடத்தில். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் எதிலும் ஆர்ப்பாட்டம் இல்லாத செயல்பாடு உள்ளவர்கள். எதிலும் ஆர்ப்பாட்டம் இல்லாத செயல்பாடு அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டால், உங்களின் கனவுகள் விரைவில் நனவாகும். பிறகு 6ம் இடம் செல்லும் சூரியன் மாணவர்களுக்கு பலவகையிலும் பாராட்டுகளை பெற்றுத் தருவார். செவ்வாய் 3ம் தேதியிலிருந்து பஞ்சம வீட்டுக்கு செல்வதால் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், கணக்கு வழக்கு, நிர்வாகம் ஆகியவற்றில் பதற்றமான முடிவுகளுக்கு இடம் கொடுக்காமலிருந்தால், பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்காமல், கட்டுக்குள் இருக்கும். சுக்ரன் 11ம் தேதி முதல் 5ம் வீட்டுக்கு செல்கிறார். கலைஞர்களுக்கு பொதுமக்களின் பாராட்டும், ஆதரவும் மனதுக்கு ஊக்கம் தரும். புதன் 11ம் தேதி முதல் பஞ்சம வீட்டுக்கு போவதால், பொது வாழ்வில் உள்ளவர்கள், ஆவேசமான பேச்சு, மற்றும் செயல்பாடு இரண்டும் விரும்பிய பலனைத்தராது என்பதை உணர்ந்து செயல்படவும். குருபகவான் 7ம் தேதி முதல் 5ம் இடத்திற்கு செல்கிறார். திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெண்களுக்கு மணமாலை சூடும் யோகம் கிட்டும். ஜூன் அதிருஷ்ட நாட்கள்: 1, 9, 10, 15, 19, 24, 27, 28. 6ம் தேதி முதல் ராகு 12ம் வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் நிற்கிறார்கள். வியாபரிகள் தக்க ஆலோசனையையும், தேவையான பொருள் வளத்தையும் சேகரித்துக் கொண்டபின் கடைகளை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கினால் நல்ல லாபம் பெறலாம். சூரியன் 6, 7 வீடுகளில் தங்குவதால், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு முன் பகுதியில் பெயருக்கேற்ற கௌரவமான பதவி தேடி வரும். மாத பின் பகுதியில் சூரியன் 7ம் இடத்திற்கு தாவுவதால், வியாபாரிகள் வரி சம்பந்தமான விவகாரங்களில் தனிக்கவனம் செலுத்துவது நல்லது. 11ம் தேதி வரை செவ்வாய் 5ல். அலுவலக வட்டத்தில் அளவோடு பேசி வந்தால், வீண் தொந்தரவுகளை எளிதில் விலக்க இயலும். பிறகு செவ்வாய் 6ம் இடத்தில் அமர்வதால், வீடு, மனைகளை வாங்கி விற்பவர்களுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். சுக்ரன் 4ம் தேதி முதல் 6ம் இடத்தில். கலைஞர்கள் மனதை அலைபாய விடாமல் இருந்தால், தொழிலில் முழு கவனம் செலுத்த முடியும். புதன் முதல் 2 வாரங்களுக்கு 6ம் வீட்டில் நிற்பதால், மாணவர்களுக்கு தகுந்த சமயத்தில் கல்விக்கான ஊக்கத்தொகை கிட்டும். பிறகு புதன் 28ம் தேதி வரை 7ம் வீட்டில் சுயதொழில் புரிபவர்களை வரவை மிஞ்சிய செலவுகள் பயமுறுத்தும். பின் புதன் மீண்டும் அஷ்டம வீட்டில். கருத்துப் பரிமாற்றத்தில் உங்கள் திறமை தெரியும். ஜூலை அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 13, 15, 19, 22, 24, 28, 31. சூரியன் 7, 8 வீடுகளில் நிற்பதால், பெண்கள் தேவையற்ற விஷயங்களுக்காக மனதை குழப்பிக்கொள்வது, வேண்டாத கவலைகளை மனதில் வைத்துக்கொள்வது ஆகிய இரண்டையும் மூட்டைக்கட்டி வைத்து விட்டால், உங்களின் வேலைகள் தேங்காமல் இருக்கும். 24ம் தேதி வரை 6ல் செவ்வாய் இருப்பதால், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். பின் செவ்வாய் 7ம் வீட்டில் குடியேறுவதால், அலுவலகப் பணிகள் žராக நடைபெற நீங்கள் அதிக நேரம் உழைப்பைப் போட வேண்டியிருக்கும். 19ம் தேதி வரை புதன் 8ல். மாணவர்களுக்கு தங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும். பின் புதன் 9ம் இடத்திற்கு போவதால், வியாபாரிகள் வெறும் வாய்வார்த்தையை நம்பி பொருட்களைக் கொடுப்பதைத் தவிர்க்கவும். சுக்ரன் 2ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை சப்தம வீட்டில் நிற்பதால், கலைஞர்கள் சிக்கலான நேரங்களில், சூழலுக்கேற்றவாறு சிந்தித்து செயலாற்றினால், உங்கள் நற்பெயருக்கு களங்கம் உண்டாகாது. பிறகு சுக்ரன் 8ம் வீட்டில் பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் உயர்ந்த நிலையை அடைவார்கள். ஆகஸ்ட் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 19, 24, 25. சூரியன் 8, 9 வீடுகளில் காய்வதால் சில சந்தர்ப்பங்களில், நண்பர்களே உங்களை எதிரியாய் கருதும் நிலை உருவாகும். பெண்களுக்கு சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகளும் வேண்டாத தலைவலிகளும் வந்து போகும். செவ்வாய் இந்த மாதமும் 7ம் ஸ்தானத்தில் நிற்பதால், தொழிலாளர்கள் பிரச்சினை சுமூகமான முறையில் முடிவதில் சிறிது தேக்க நிலை உண்டாகும். 9ம் வீட்டில் இருக்கும் புதன் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை வக்ர கதியில் இருந்து 27ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி பெறுகிறார். கூட்டுத்தொழிலில், வியாபார வர்க்கத்தின் ஆதரவு குறையாதவாறு அனுசரித்து நடந்துகொண்டால், லாபக்கணக்கு குறையாது. பெற்றோர்கள், பிள்ளைகள் அதிகாரக் கட்டளையை விட அன்புக் கட்டளைக்கு எளிதில் அடி பணிவார்கள் என்பதை நினைவில்கொள்வது அவசியம். பணியில் இருப்பவர்கள் தவறுகள் நேராதவாறு கவனமாய் செயலாற்றுங்கள். அதிகாரிகளின் சினம் உங்களைத் தீண்டாமல் இருக்கும். இந்த மாதம் சுக்ரன் 8, 9 வீடுகளில் உலா வருவதால், கலைஞர்களின் புத்திசாலித்தனத்தால், எதிரிகளின் முயற்சிகள் முறியடிக்கப்படும். செப்டம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 19, 21, 28, 30. சூரியன் முன் பகுதியில் 9ம் வீட்டில் நிற்கிறார். பிறர் உங்கள் திறமைகளை குறைவாக எடை போட இடம் கொடுக்காதிருப்பது புத்திசாலித்தனம். பெண்கள் பேச்சில் கவனமாக இல்லாவிட்டால், வீண் வாக்குவாதங்களை சிறிய விஷயங்கள் பெரிதாக மாறும். பிறகு பகலவன் 10ம் வீட்டில் பிரகாசிப்பதால், மாணவர்கள் தங்கள் அறிவுப்பூர்வமான கருத்துக்களை தக்க நேரத்தில் பயன்படுத்தி நல்ல பெயரைத் தட்டிக்கொண்டு போவார்கள். 9ம் தேதியிலிருந்து செவ்வாய் 8ம் வீட்டில் நிற்பதால், வேண்டாத நபர்களால் சில மறைமுக உபாதைகள் தலைதூக்க வாய்ப்புள்ளதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளிவட்டாரத்தில் கவனமாக இருக்கவும். 9ல் இருந்து மன உளைச்சலைத் தந்து கொண்டிருந்த புதன், 22ம் தேதி முதல் 10ம் இடத்திற்கு மாறுவதால், மந்த நிலை மாறி, வியாபாரத்தில் விறுவிறுப்பும் அதற்கேற்றவாறு வரவும் கூடும். 10ம் தேதி முதல் சுக்ரன் தசம வீட்டில் தங்குகிறார். சக கலைஞர்களிடையே எழும் வாக்குவாதங்களை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக்கொள்வது சிறந்த வழியாகும். சுயதொழில் புரிபவர்கள் வெளி உறவுகளில் சுமூகமான சூழல் நிலவுமாறு பார்த்துக்கொண்டல் மன உளைச்சல் இன்றி வேலைகள் முடியும். அக்டோபர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 15, 19, 24, 28. ஆதவன் 10, 11 வீடுகளில் ஒளிர்வதால், பணியில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் நல்லாதரவோடு அவர்களின் அபிமானமும் கிட்டும். மாணவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக்கூடிய காலகட்டம் இது. செவ்வாய் 29ம் தேதி வரை 8லும், பிறகு 9ம் வீட்டிலும் நிற்பதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் வேகத்தை விட, விவேகமாக செயல்பட்டால், பாராட்டு நிச்சயம். சுயதொழில் புரிபவர்களுக்கு பழைய கடன் மூலம் சில சிக்கல் தோன்றி மறையும். புதன் 9ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை 11ல் நிற்பதால், வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் நிலவி வந்த சங்கடங்கள் தீர்ந்து புதிய திட்டங்கள் மளமளவென்று நடைபெறும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தரும் ஊக்கம் உங்களின் திறமையை மேலும் பெருக்கும். பிறகு புதன் 12ம் இடத்தில் நிற்கிறார். பெண்கள் வீண் பேச்சில் நேரம் செலவழிப்பவரிடம் அதிகம் நெருங்கிப்பழகுவதை குறைத்துக்கொண்டால், வீண் வருத்தம் ஏற்படாமலிருக்கும். 4ம் தேதி முதல் சுக்ரன் 11, 12 வீடுகளுக்கு உரிமை கொண்டாடுவதால், மங்கல காரியங்கள் மனம் விரும்பியது போல் நல்ல விதமாய் முடியும். குடும்பத்தில் சந்தோஷம் வலம் வரும். நவம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 19, 23, 24, 28. சூரியன் முன் பாதியில் 11ம் வீட்டில் ஒளிர்வதால், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகள் விரைந்து முடியும். உங்கள் பேச்சில் கம்பீரமும், கௌரவமும் கூடும். பிறகு சூரியன் 12ம் வீட்டில் தங்குவதால், வயதானவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் அதிக அலைச்சல், அகால போஜனம் இரண்டையும் தவிர்ப்பது நலம். செவ்வாய் இந்த மாதம் 9ம் வீட்டில் உள்ளார். மாணவர்கள் சண்டைக்கு அஸ்திவாரம் போடுபவர்களிடமிருந்து விலகியிருப்பது சிறந்தது. 12ம் இடத்தில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் அடைகிறார். பொது வாழ்வில் இருப்பவர்கள் சுற்றியிருப்பவர்களின் வீண் புகழ்ச்சியில் மாட்டிக்கொள்ளாமல் கவனமாக இருப்பது முக்கியம். 14ம் தேதி முதல் 11ம் வீட்டில் அமரும் சனி பகவான், வியாபார வட்டத்தில் உங்களுக்கென்று ஓர் இடத்தையும், பெயரையும் பெற்றுத்தருவார். சுக்ரன் இந்த மாதம் 12, 1 வீடுகளில் சுழலுவதால், கலைஞர்களின் விடாமுயற்சி, உழைப்பு இரண்டும் அவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும். டிசம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 18, 19, 24, 27, 28. சூரியன் 12, 1 வீடுகளில் தங்குகிறார். வியாபாரிகள் கூட்டு பயிற்சி மூலம் மேற்கொள்ளும் காரியங்களில் வீண் விவாதம், அவநம்பிக்கை ஆகியவை குறிக்கிடாமல் பார்த்துக்கொண்டால், லாபம் குறையாது. பெண்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருந்தாலும், ஆரோக்கியத்தில் கவனம் வைப்பது அவசியம். செவ்வாய் இந்த மாதமும் 9ம் இடத்தில் உள்ளார். பொது வாழ்வில் உள்ளவர்கள் அதிக கடன், ஆடம்பரச்செலவு ஆகியவற்றை குறைப்பது அவசியம். மாணவர்கள் பொறாமைக் குணம் இன்றி செயல்பட்டால், அதிக நன்மைகள் உங்களை நாடி வரும்! 14ம் தேதி வக்ர நிவர்த்தி பெறும் புதன் இந்த மாதம் 12ம் வீட்டில் நிற்பதால், சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சியில் இறங்கும் முன் தீவிர ஆலோசனையுடன், சரியான செயல்பாட்டையும் இணைத்துகொண்டால், நினைத்த இலக்கை விரைவில் அடைய முடியும். சுக்ரன் 21ம் தேதி முதல் 2ம் இடத்திற்குப் போவதால், கலைஞர்களின் தாழ்வு மனப்பான்மை விலக நட்பு கை கொடுக்கும். |
|
|
Thappu Seiravangala Mannikirathe Oru Periya Thandanai!
|
|
Time to create page: 0.37 seconds