Welcome, Guest
Username Password: Remember me

2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Magaram
(1 viewing) (1) Guest
Tips
  • Page:
  • 1

TOPIC: 2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Magaram

2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Magaram 1 month, 2 weeks ago #1421

ஜனவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 24, 27, 28.
இந்தப் புத்தாண்டு சுக்ரனின் அருளோடு துவங்குகிறது. 11, 12 வீடுகளில் நிற்கும் சுக்ரனால், பெண்களுக்கு இனிமையான அனுபவங்கள், சிறப்பான உணவு வகைகள் ஆகியவற்றை அனுபவிக்கும் வாயப்புகள் வரும். செவ்வாய் உங்கள் ராசியில். பணியில் இருப்பவர்கள் வாகனம் ஓட்டும் போது வாகனம் தொடர்பான ஆவணங்களை கையிலேயே வைத்திருந்தால், வீண் அலைச்சலைத் தவிர்க்கலாம். வியாபாரிகளுக்கு மறதி, தடுமாற்றம் ஆகியவை எட்டிப்பார்க்கும் வாய்ப்பிருப்பதால், கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ஆவணங்களை பத்திரமாக வைப்பது நல்லது. சூரியன் 12, 1 வீடுகளில் நிற்பதால், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். ஆயாசம் தோன்றாத வகையில், சத்தான உணவு வகைகளை உண்ணுதல் அவசியம். புதன் 3ம் தேதி முதல் 12, 1 வீடுகளில் சுழலுவதால், மாணவர்கள் படிப்பில் சுணக்கமின்றி சுறுசுறுப்புடன் செயலாற்றி வந்தால், வேம்பாய் விளங்கிய பாடம் கரும்பாய் இனிக்கும்! கலைஞர்கள் விழா, விருந்து போன்ற பொது இடங்களில், சொற்சிக்கனத்தை கையாளவும்.
பிப்ரவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 22, 24, 28.
சூரியன் 1, 2 வீடுகளில் சஞ்சாரம் செய்வதால், வியாபாரிகள், கூட்டாளிகள் நட்போடு பழகினாலும், அவர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு அலைந்து திரிந்து பணம் சம்பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த மாதம் செவ்வாய் 2ல். பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் சென்றால் அவமதிப்பிலிருந்து தப்பிக்கலாம். பெண்கள் புதிய நண்பர்களுக்காக உறவினர்களையோ, மற்ற நண்பர்களையோ பகைத்துக்கொள்ள வேண்டாம். புதன் 18ம் தேதி முதல் 2ம் இடத்தில் அமர்கிறார். வியாபாரிகளுக்கு பணவரவை பெறுவதில் இருந்த தாமதம் நீங்கி தாராளமான பணவரவு கிடைக்கும். மாணவர்களுக்கு நண்பர்கள் தக்க சமயத்தில் அனைத்து உதவிகளையும் செய்வார்கள். சுக்ரன் 11, 1 வீடுகளில் தவழ்வதால், பொதுவாழ்வில் இருப்பவர்கள் நல்லவர்களின் துணைகொண்டு தங்கள் காரியங்களை வெற்றிகரமாகச் செய்வார்கள். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கலைஞர்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் இனி நிறைவேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
மார்ச்
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 24, 24, 28.
சூரியன் முன் பகுதியில் 2ல். மாணவர்கள் புதிய ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்குவதைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. பெண்களுக்கு சில சிரமமும் கூடுதல் பணச்செலவும் உண்டாகும். பிறகு சூரியன் 3ம் வீட்டிற்கு மாறுவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் எடுத்த காரியங்கள் எல்லாம் இனிது நிறைவேறும். முதியோர்களின் மருத்துவச் செலவுகள் குறையும். செவ்வாய் 24ம் தேதி வரை 2ல். புதிய சொத்து வாங்க விரும்புபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதன் முழு விபரத்தையும் தெரிந்துகொண்டு வாங்குவதன் மூலம் தேவையற்ற பணநஷ்டத்தையும் மனக்கஷ்டத்தையும் தவிர்க்கலாம். பிறகு செவ்வாய் 3ம் இடத்தில் நிற்கிறார். உங்களின் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் நல்ல வேலையில் அமர்வார்கள். புதன் 3, 4 வீடுகளில் பயணம் செய்வதால், வியாபாரிகளுக்கு, உங்கள் கீழ் வேலை செய்பவர்களால் சிறு பிரச்சினைகள் தோன்றும். அதனால் அவர்களின் தேவைகளைக் கவனித்துப் பூர்த்தி செய்யவும். சுக்ரன் 1, 2 வீடுகளில் நிற்கிறார். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கலைஞர்கள் கடினமான காரியங்களைக் கூட சுலபமாகச் செய்து முடித்து விடுவார்கள்.
ஏப்ரல்
அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 19, 21, 23, 28, 30.
சூரியன் மாத முன் பகுதியில் 3ல் நிற்கிறார். உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்வார்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். பிறகு சூரியன் 4ம் வீட்டிற்கு நழுவுவதால், மாணவர்களுக்கு உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். சிறுதொழில் புரிபவர்கள் எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியது இருக்கும். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் 3ம் வீட்டில் இருப்பதால், பெண்கள் மனதில் முள்ளாய் உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயம் முடிவுக்கு வரும். சிலர் புதிய வீட்டிற்குக் குடிபோவார்கள். 4ல் இருக்கும் புதன் ஏப்1 முதல் புதன் வக்ரம் ஆகி 23ல் வக்ர நிவர்த்தி பெற்று விடுகிறார். வேலை நிமித்தமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலையும் உருவாகலாம். வியாபாரிகள் கஷ்டப்பட்டு முன்னேற வேண்யது இருக்கும். வியாபாரத்தில் எந்த அதிரடி மாற்றத்தையும் அவசரப்பட்டுச் செய்யவேண்டாம். கூட்டாளிகளையும் அனாவசியமாகச் சந்தேகப்பட வேண்டாம். சுக்ரன் 2, 3 வீடுகளில் உலா வருவதால், புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன் கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு இரண்டும் வந்து சேரும். பொதுநல சேவகர்கள் žரான பலனை காண்பர்.
மே
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 15, 19, 23, 24, 28.
சூரியன் 4, 5 வீடுகளில் பயணம் செய்வதால், பெண்களுக்கு வருமானம் ஒரு புறம் வந்து கொண்டிருந்தாலும் பார்த்துப் பார்த்துச் செலவு செய்ய வேண்டியிருக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் செயல்பாடுகள் கவலை தருவதாக அமையும். செவ்வாய் 3ம் தேதி முதல் 4ம் இடத்திற்கு மாறுவதால், பணியில் இருப்பவர்களுக்கு உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதை சாமர்த்தியமாக முறியடித்து வெற்றி காண உழைக்க வேண்டி இருக்கும். வீடு-மனை வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள். புதன் 11ம் தேதி முதல் 4ம் இடத்தில் நிற்பதால், மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். அத்துடன் வீண் வம்புகளிலிருந்தும் ஒதுங்கி இருப்பது அவசியம். வியாபாரிகள் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்திருக்கவும். சுக்ரன் 11ம் தேதி முதல் 4ம் இடத்திற்குப் போவதால், கலைஞர்களின் வருமானம் žராக இருப்பதோடு, தொழிலில் புதிய சூழல் உருவாகும். போட்டியாளர்கள் சற்று பின் தங்குவார்கள். குரு பகவான் 7ம் தேதி முதல் 4ம் இடத்திற்கு செல்கிறார். பங்குச்சந்தையில் அளவுக்கு அதிகமாக பணத்தை முடக்காமலிருப்பது புத்திசாலித்தனம்.
ஜூன்
அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28.
6ம் தேதி முதல் ராகு 11ம் வீட்டில் நிற்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறைவதோடு தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பதாலும், கேது 5ம் வீட்டில் நிற்கும் கேது மாணவர்களுக்கு தேவையில்லாத பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். எனவே எதிலும் கவனமாக இருப்பது நல்லது. சூரியன் முன் பகுதியில் பஞ்சம வீட்டில் நிற்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வீண் மனஉளைச்சல்கள் வந்து போகும். பிறகு சூரியன் 6ம் இடத்தில் ஒளி வீசுகிறார். பெண்மணிகள் இல்லத்திற்கு வேண்டிய பொருட்களையும். வாங்கி மகிழ்வார்கள். செவ்வாய் 12ம் தேதி முதல் 5ம் வீட்டில் நிற்பதால், சகோதர, சகோதரிகளுக்கு தவிர்க்க முடியாத செலவுகளைச் செய்ய வேண்டிவரும். ஆனால் அவர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவது என்பது சற்று கடினமே. புதன் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை 5ம் வீட்டில். பணியில் இருப்பவர்கள் எதிரிகளின் வகையில் அசட்டையாக இருந்தால் அவர்களால் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். பிறகு 27ம் தேதி வரை 6ம் வீட்டில் நிற்பதால், வியாபாரிகள் சொந்தமான புது இடத்திற்கு வியாபாரத்தை மாற்றி, அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கக் காண்பார்கள். பிறகு புதன் 7ம் வீட்டிற்கு மாறுகிறார். சுயதொழில் புரிபவர்கள் பண விவகாரங்களில் நிதானமாக செயல்படுவது அவசியம். சுக்ரன் 4ம் தேதி முதல் 5ம் வீட்டில் அமர்வதால், பல வழிகளிலும் முன்னேறுவார்கள்.
ஜூலை
அதிருஷ்ட நாட்கள்: 1, 9, 10, 15, 18, 19, 24, 27, 28.
சூரியன் 6, 7 வீடுகளில் சஞ்சரிப்பதால், மாத முன் பகுதியில், பொது வாழ்வில் இருப்பவர்கள் நல்ல செயல்களைச் செய்து தங்களின் பெருமையைக் கூட்டிக்கொள்வார்கள். மனதில் தெளிவு பிறக்கும். பிறகு சூரியன் 7ம் இடம் போவதால், பிறருக்கு சிபாரிசு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது. செவ்வாய் 25ம் தேதிமுதல் 6ம் இடத்தில் உள்ளார். பெண்களின் பொருளாதார வளம் சிறக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். 19ம் தேதி வரை ஸப்தம வீட்டில் புதன் இருப்பதால், உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும். பிறகு புதன் 8ம் இடத்திற்கு செல்கிறார். வியாபாரிகளுக்கு புதிய வியாபாரம் நல்ல லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைப்படி நடந்து முன்னேற்றம் காண்பர். சுக்ரன் 2ம் தேதி முதுல் 6, 7 வீடுகளில் தங்குவதால், கலைஞர்களுக்கு பிறரால் வீண் விரோதம் உருவாகும். பெற்றோர்கள் பிள்ளைகள் உடல்நலனில் சற்று அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
ஆகஸ்ட்
அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 11, 15, 19, 29, 24.
சூரியன் 7, 8 வீடுகளில் இருக்கிறார். பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமூகத்தில் உங்களை நல்ல விதமாக நடத்தியவர்கள்கூட, கண்டுகொள்ளாமல் செல்லும் மாறுபட்ட சூழ்நிலையை சந்திப்பார்கள். சேதம், தடுமாற்றமும் உங்களின் வேகத்தை குறைக்கலாம். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் 6ம் வீட்டில் உள்ளார். மாணவர்கள் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பார்கள். அத்துடன் போட்டிகளில் புது உற்சாகத்துடன் களமிறங்கி வெற்றி வாகை சூடுவார்கள். சுய தொழில் புரிபவர்களின் தேவைகள் எளிதில் பூர்த்தி ஆகும். 8ல் இருக்கும் புதன் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை வக்ர கதியில் இருந்து 27ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி பெறுகிறார். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை முறையாக பயன்படுத்துவதே போதுமானது. உறவினர்களிடம் எந்த சூழ்நிலையிலும் மனஸ்தாபம் வரும் அளவிற்கு பேசாதீர்கள். 17ம் தேதி முதல், 8ம் இடத்திற்கு செல்லும் சுக்ரன் கலைஞர்களுக்கு காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், சுபங்களையும் அள்ளித்தருவார்.
செப்டம்பர்
அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 28.
சூரியன் 8, 9 வீடுகளில் நிற்கிறார். தொழிலதிபர்கள் கூடுதல் முயற்சியுடன் வாய்ப்புகளை பெறும் நோக்கில் செயல்படுவது நல்லது. பணியாளர்கள் ஒருமுகத் தன்மையுடன் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே வேலைகள் தேங்காமலிருக்கும். செவ்வாய் 9ம் தேதி முதல் 7ம் இடத்திற்கு மாறுவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள், எடுத்த காரியத்தில் பதட்டத்தைத் தவிர்க்கவும். அத்துடன் பேச்சிலும் செயலிலும் நிதானம் தவறினால், பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும். 21ம் தேதி வரை புதன் 8ல் இருப்பதால், வியாபாரிகள் எடுக்கும் காரியங்கள் வெற்றி பெறும். மாணவர்களின் இனிய பேச்சால் நட்பு வட்டாரம் பெருகும். பூர்வீக சொத்தில் எதிர்பார்த்த வருமானம் பெருகும். பிறகு புதன் 9ம் வீட்டில் நிற்பதால், கலைஞர்கள் விதிமுறைகளைப் படிக்காமல் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். இந்த மாதம் சுக்ரன் 8, 9 வீடுகளில் சுழலுவதால், பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். சுப காரியப் பேச்சுக்கள் நல்ல திசையில் செல்லும்.
அக்டோபர்
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 27, 28.
சூரியன் முன் பகுதியில் 9ம் இடத்தில் நிற்கிறார். பணியாளர்களின் போக்கில், விரும்பாத மாற்றங்கள் ஏற்படும். எனவே பொறுப்புக்களை பகிர்ந்தளிக்கும் முன் வியாபாரிகள் யோசனை செய்வது அவசியம். பிறகு சூரியன் 10ம் இடம் செல்கிறார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட உறவினர்களின் ஆரோக்கியம் žராகத் திகழும். சுயதொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த அரசு சலுகை தக்க சமயத்தில் கிட்டும். 7ல் இருக்கும் செவ்வாய் 30ம் தேதி முதல் 8ம் இடத்திற்கு செல்வதால், வேலையில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு மீறிய வகையில் பணப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே விழிப்புடன் செயல்படவும். புதன் 4ம் தேதி முதல் நன்மைகளைத் தரும் 10, 11 வீடுகளில் தங்குகிறார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பேச்சில் நிதானமும், இனிமையும் உண்டாகும். வியாபாரிகள் வீடு வாகன வகைகளில் தேவைப்படும் பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். 4ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை சுக்ரன் 10ல் பணிபுரியும் பெண்கள் கவனமாகச் செயல்பட்டு பணிகளை வேகமாக முடித்தாலும் கூட சலுகைகள் பெறுவதில் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டியிருக்கும். கலைஞர்கள் வருமானத்திற்கு ஏற்ப வீட்டுத் தேவைகளில் நிதானப்போக்கினை கடைபிடிக்க வேண்டிவரும். பிறகு சுக்ரன் நன்மை தரும் 11ம் இடத்திற்கு மாறுகிறார்.
நவம்பர்
அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 22, 24, 28.
சூரியன் 10, 11 வீடுகளில் ஒளி வீசுகிறார். பெண்களின் மனதில் புத்துணர்வும், செயல்திறனும் அதிகரிக்கும். பணவரவு பலவழிகளிலும் எளிதாக கிடைப்பதால், குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய இயலும். சிறுதொழில் புரிபவர்களுக்கு நீண்டநாள் அடைபடாமல் இருந்த கடனைத் திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு ஏற்படும். செவ்வாய் இந்த மாதம் 8ல். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் தொல்லை உண்டாகும். அவர்கள் கண்ணில்படாமல் சற்று விலகி இருப்பது நல்லது. வியாபாரிகள் சமூகத்தில் தாங்கள் பெற்று இருக்கும் அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள கொஞ்சம் போராட வேண்டியிருக்கும். 11ம் இடத்தில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் அடைகிறார். மாணவர்கள் லட்சியத்துடன் படிப்பில் ஆர்வத்தைக்காட்டி அனைவரின் பாராட்டையும் பெறுவர். 14ம் தேதி முதல் 10ம் வீட்டில் அமரும் சனி பகவான், பணியில் இருப்பவர்களுக்கு வேண்டாத இடமாற்றத்தைக் கொடுப்பார். 20ம் தேதி வரை 11ல் இருந்து கலைஞர்களுக்கு சலுகை பல தந்த சுக்ரன் 21ம் தேதி முதல் 12ம் இடத்திற்கு செல்வதால், கலைஞர்களுக்கு இனிமையான பயண அனுபவங்கள் வந்து சேரும்.
டிசம்பர்
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 19, 24, 25, 28.
சூரியன் முன் பகுதியில் 11ம் இடத்தில் நிற்பதால், வியாபாரம் நடத்தும் பெண்கள் கூடுதல் சந்தை வாய்ப்புகளைப் பெற்று விற்பனையில் வளர்ச்சி காண்பர். பணவரவும் எதிர்பார்த்த வகையில் அமையும். பிறகு சூரியன் 12ம் இடத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளின் உடல்நலத்திற்காக பணம் செலவு செய்யும் சூழல் உருவாகும். பொது வாழ்வில் உள்ளவர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் மட்டுமே மனநிம்மதி பெற முடியும். செவ்வாய் இந்த மாதமும் 8ல். கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலம் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கும் வாய்ப்பிருப்பதால், வேண்டாத உணவு வகைகளை அறவே விலக்கி விடுவது நல்லது. 11ல் நிற்கும் புதன் 14ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி பெறுகிறார். மாணவர்களுக்கு உறவினர்களின் அன்பும், பாசமும் கூடுதலாக கிடைக்கும். கலைப்பொருட்களைத் தயாரித்து விற்பவர்களுக்கு, பொருட்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதன் மூலம் கணிசமான லாபம் கிட்டும். சுக்ரன் இந்த மாதம் 12, 1 வீடுகளில் உலாவருவதால், கலைஞர்கள் எதிர்பார்த்திருந்த விருதும், பட்டமும் தக்க சமயத்தில் வந்து சேரும்
  • Diana
  • OFFLINE
  • Gold Boarder
  • Posts: 246
  • Karma: 2
Thappu Seiravangala Mannikirathe Oru Periya Thandanai!
  • Page:
  • 1
Time to create page: 0.36 seconds