|
Welcome,
Guest
|
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Kumbam
(1 viewing) (1) Guest
Tips
|
TOPIC: 2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Kumbam
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Kumbam 1 month, 2 weeks ago #1422
|
ஜனவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 27, 28. சூரியன் மாத முன் பகுதியில் 11ல். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல் குழப்பங்கள் எல்லாம் நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிறகு சூரியன் 12ல் மறைவதால், பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்தாலும் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் சொற்பமாகவே இருக்கும். செவ்வாய் 12ல் நிற்பதால், பணத்தட்டுபாட்டினால் தொழில் தேவைகளை நிறைவேற்ற சிரமப்பட வேண்டியிருக்கும். மாணவர்கள் விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றை பத்திரமாக வைப்பது அவசியம். புதன் 7ம் தேதி முதல் 10ம் வீட்டில் அமர்வதால், வியாபாரிகளுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, உற்சாகம் மேலிடும். பிறகு புதன் 12ம் இடம் செல்வதால், சுய தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் சற்றே சிரமத்தின் நடுவே வந்து சேரும். சுக்ரன் 28ம் தேதி வரை 10ம் இடத்தில் உள்ளார். கலைஞர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியில் முழு கவனம் செலுத்துவது அவசியம். பிறகு சுக்ரன் 11ம் இடம் போவதால், மாணவர்களுக்கு நண்பர்கள் மத்தியில் இருந்த மன வேறுபாடுகள் விலகும். பிப்ரவரி அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 19, 22, 24. சூரியன் 12, 1 வீடுகளில். எதிர்ப்புக்களின் கரம் வலுத்திருக்கும் நேரமிது என்பதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் யாரிடத்திலும் வெளிப்படையாகப் பேசிப் பழக வேண்டாம். குடும்பத்தில் நிலவும் அதிருப்தி காரணமாக, கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்களுக்கு பணியிடத்தில், திடீரென்று சிறு குழப்பங்கள் தோன்றும். செவ்வாய் 15ம் தேதி முதல் உங்கள் ராசியில் அமர்கிறார். பூமி, நிலம் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் எந்த சூழலிலும், கண்ணியமாக நடந்துகொள்வதை கடைப்பிடிப்பது அவசியம். பெண்கள் பிறர்க்கு கடன் கொடுப்பதைத் தவிர்த்தல் அவசியம். புதன் 18ம் தேதி முதல் உங்கள் ராசியில். மாணவர்களுக்கு நண்பர்களால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும் வாய்ப்பிருப்பதால், செலவுகளில் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு அரசு சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைப்பது சற்று கடினமே. சுக்ரன் 11, 12 வீடுகளில் சுழலுவதால், கலைஞர்களின் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி உண்டாகும். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். மார்ச் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 24, 25, 28. சூரியன் 1, 2 வீடுகளில் நிற்பதால், பணியில் இருப்பவர்கள் காரணமில்லாமல் அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பிருப்பதால், தங்களுடைய வேலையில் கவனமாக இருப்பது முக்கியம். பெண்கள் விரும்பிச் சென்றாலும், சில தந்தை வழி உறவுகள் விலகியே நிற்கும். செவ்வாய் இந்த மாதம் 1, 2 வீடுகளில் நிற்கிறார். பணியில் இருப்பவர்கள் குடும்பத்தின் முக்கிய தேவைகளுக்கு கூட கடன்பெறும் சூழல் உண்டாகும். கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட வழியுண்டு. குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து பொறுமையைக் கடைபிடிப்பது நன்மை தரும். புதன் 6ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை 2ம் இடத்தில். தொழிலாளர்களின் நீண்ட நாள் பிரச்சினை சுமூகமாக முடிவதால், வியாபாரிகளுக்கு தொழிலில், ஆர்வமும், ஈடுபாடும் பன்மடங்காகப் பெருகும். பிறகு புதன் 3ம் இடத்தில் கலைஞர்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருந்தால், பொருள்கள் தவறிப்போவதைத் தவிர்க்க முடியும். சுய தொழில் புரிபவர்களுக்கு வீண் செலவுகள் சில பொருளாதார சங்கடங்களை உருவாக்கினாலும் உங்கள் சேமிப்பு கைகொடுக்கும். சுக்ரன் இந்த மாதம் 12, 1 வீடுகளில் நிற்பதால் கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அவர்களின் திறமைக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். ஏப்ரல் அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 19, 21, 23, 28. சூரியன் மாத முன் பகுதியில் 2ல் நிற்கிறார். பெண்கள் மூத்தோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் ஆதரவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிராது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு, எதிர்பாராத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். பிறகு சூரியன் 3ம் இடத்திற்கு மாறுவதால், கிடப்பில் கிடந்த சலுகைகள் வியாபாரிகளுக்கு வந்து சேர்வதால், உற்சாகத்துடன் திகழ்வார்கள். போட்டா போட்டியில் வெற்றி மாணவர்களுக்கே! செவ்வாய் இந்த மாதமும் 2ம் இடத்தில் உள்ளார். எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தை வீணடிக்காதீர்கள். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள், வேலையாட்களை அரவணைத்துச் சென்றால், எடுத்துக்கொண்ட பணிகள் முழுமையாக நிறைவடையும் என்பதை நினைவில்கொண்டு செயல்படவும். 3ல் இருக்கும் புதன் ஏப்1 முதல் புதன் வக்ரம் ஆகி 23ல் வக்ர நிவர்த்தி பெற்று விடுகிறார். வேலை நிமித்தம் வெளியூர் செல்பவர்களுக்கு சில உடல் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால், வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. சில காரியங்கள் நீங்கள் விரும்பியவாறு அமையாது சற்றே தாமதமாகும் நிலை உருவாகும். சுக்ரன் 1, 2 வீடுகளில் சுழலுவதால், கலைஞர்களுக்கு உறவும் நட்பும் மனதிற்கு இதமாய் அமையும். உங்களின் பொலிவான தோற்றம், உங்களுக்கென்று தனி இடத்தை உருவாக்கித் தரும். மே அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 15, 19, 23, 24, 28. குரு பகவான் 7ம் தேதி முதல் 3ம் இடத்திற்கு செல்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சற்று சிரமங்கள் தோன்றி மறையும். அலைச்சல் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒவ்வாமை தோன்றும் வாய்ப்பிருப்பதால், உணவு மற்றும் மருந்து விஷயங்களில் எச்சரிக்கையாய் செயல்படவும். சூரியன் முன் பகுதியில் 3ம் இடத்தில். உங்களின் சாதுரியமான பேச்சால், சில முக்கிய காரியங்களை சாதித்துக்கொள்ளும் வேளை இது. மருந்துகளை விற்பனை செய்பவர்கள் கடன் தீர்வு சம்பந்தமான எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். பிறகு சூரியன் 4ம் இடம் நகர்கிறார். புதிதாக தொழில் துவங்கியவர்கள் உழைப்புக்கும், தொழிலுக்கும் உரிய பலன் கிடைக்கும் வரை பொறுமையாய் இருக்கவும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் உரையாடல்களில், கிண்டல், கேலிப்பேச்சு ஆகியவை கலக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் நல்ல உறவுகள் உண்டாகும். செவ்வாய் 3ம் தேதி 3ம் இடம் செல்வதால் பணியில் இருப்பவர்கள் சந்தித்த பின்னடைவு, ஏமாற்றம் யாவும் நீங்கிவிடும். இந்த மாதம் புதன் 3ல் தங்குகிறார். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பிரச்சினைகளில் பாரபட்சமின்றி செயல்பட்டால், மறைமுக எதிர்ப்பு, நிர்ப்பந்தம் ஆகியவை உங்கள் அருகே வராது. 2, 3 வீடுகளில் பவனி வரும் சுக்ரனால், கலைஞர்களின் உழைப்பிற்குரிய பலன் உரிய காலத்தில் கிடைப்பதுடன் மனதில் சந்தோஷமும் பூக்கும். ஜூன் அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 14, 15, 19, 23, 24, 28. 6ம் தேதி முதல் ராகு 11ம் வீட்டில் நிற்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறைவதோடு தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். 5ம் வீட்டில் நிற்கும் கேது மாணவர்கள் மனதில் சற்று சஞ்சலங்களை உருவாக்கினாலும், 11ல் இருக்கும் ராகு அதனை மாற்றி தைரியமாய் செயல்படும் குணத்தை அளிப்பார். பிறகு கேது 4ம் வீட்டிற்கும், ராகு 10ம் வீட்டிற்கும் போவதால், பொதுவாழ்வில் இருப்பவர்களுடன் கிடைத்தவரை லாபம் என்ற ரீதியிலேயே நண்பர்கள் பழகுவார்கள். எனவே அந்தரங்க விஷயங்களை எவரிடமும் அலச வேண்டாம். சூரியன் 4, 5 வீடுகளில் தங்குவதால் வியாபாரிகள் மறைமுக எதிரிகளால் வரும் தொல்லைகளை திறம்பட முறியடிக்க வேண்டியிருக்கும். பெண்கள் இன்பம், துன்பம்- இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொண்டால், எளிதில் தடைகளை தாண்டி சென்று முன்னேறலாம். செவ்வாய் 12ம் தேதி முதல் 4ம் இடத்திற்கு மாறுவதால், தாயாரின் உடல்நிலையில் சில பின்னடைவுகள் தலை காட்டும். புதன் 27ம் தேதி வரை 4, 5 வீடுகளில் தங்குவதால் மாணவர்கள் உடன் இருப்பவர்கள், உடனிருப்பவர் ஏதேனும் ஒரு பிரச்சினையை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். 3, 4 வீடுகளில் நிற்கும் சுக்ரன், கலைஞர்களின் சுவையான வாழ்விற்கும், இனிமையான நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பேற்பார். ஜூலை அதிருஷ்ட நாட்கள்: 1, 9, 10, 15, 18, 19, 24, 27, 28. சூரியன் முன் பகுதியில் 5ல் உள்ளார். சுய தொழில் புரிபவர்கள் கடினமாக உழைத்தாலும் காசைப்பார்ப்பது என்பது சற்று கடினமாக இருக்கும். உறவினர்களுடைய கருத்துடன் ஒத்துப்போக முடியாத காரணத்தால் தற்சமயம் குடும்பத்தில் சிறிது சஞ்சலங்கள் இருக்கும். பிறகு சூரியன் 6ம் வீட்டில் அமர்வதால், தந்தை வழி உறவினர்களுடன் ஏற்பட்ட பகைமை நீங்கி மீண்டும் உறவுகள் மலரும். செவ்வாய் இந்த மாதம் 4, 5 வீடுகளில் தங்குவதால், வியாபாரிகளுக்கு தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்கள் குதர்க்கவாதிகளின் பேச்சை காதில் வாங்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், பணிக்குரிய பலனும், பாராட்டும் கிடைக்கும். புதன் 19ம் தேதி வரை 6ல் நிற்பதால், வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு கூடும். பிள்ளைகள் பொறுப்பாகச் செயல்பட்டு உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். பிறகு புதன் 7ம் வீட்டில் கூட்டாளிகளின் தேவைகளைக் காலம் அறிந்து பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் வியாபார வட்டத்தில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சுக்ரன் 2ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை 5ல். உறவினர் இடையே உங்கள் செல்வாக்கு உயரும். மேலும் சுக்ரன் சுப நிகழ்ச்சிகளுக்குக் கட்டியம் கூறுவார். பிறகு சுக்ரன் 6ம் இடம் செல்வதால், கலைஞர்கள் வாய்ச்சண்டைக்கு இடம் தராமல் இருப்பது நல்லது. ஆகஸ்ட் அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 11, 15, 19, 20, 24. சூரியன் முன் பகுதியில் 6ம் வீட்டில். கர்ப்பிணிப் பெண்களின் உடல் நலிவுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். சுறுசுறுப்புடன் செயலாற்றுவார்கள். பிறகு சூரியன் 7ம் வீட்டில் அமர்வதால், மாணவர்கள் நண்பர்களிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், நட்பு இழை விலகாமல் இருக்கும். செவ்வாய் இந்த மாதம் 5ம் வீட்டில் உள்ளதால், பொது வாழ்வில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் பேசிப் பழகாவிட்டால் பலரது விரோதங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். அலுவலகத்தில் எப்படித்தான் வேலைப் பார்த்தாலும்கூட மேலதிகாரிகளை திருப்திப்படுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும். 7ல் இருக்கும் புதன் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை வக்ர கதியில் இருந்து 27ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி பெறுகிறார். கலைஞர்களில் சிலருக்கு தொழில் செய்யும் இடத்தில் பிரச்சினைகளும், தொல்லைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே கவனமாக இருக்கவும். சுக்ரன் இந்த மாதம் 6, 7 வீடுகளில் நிற்பதால், பொது வாழ்வில் உள்ளவர்களின் பொருளாதாரத் தேவைகள் அதிகமாக இருக்கும். அவற்றை எல்லாம் சமாளிக்க சிறிது சிரமப்பட வேண்டி இருக்கும். நீங்கள் நல்லவர்களாகவே இருந்தாலும் தற்சமயம் மற்றவர்கள் உங்களை சரியாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள். செப்டம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23. சூரியன் 7, 8 வீடுகளில் நிற்பது போல், பொது வாழ்வில் உள்ளவர்கள் ஈடுபடும் காரியங்களும், உடன் இருப்பவர்களின் அவசர போக்கால், பாதியிலேயே நிற்கும் சூழல் உருவாகும். சுயதொழில் புரிபவர்கள், கடன் பிரச்சினைகளால் கலக்கம் அடையலாம். வாழ்க்கைத்துணையுடன் விவாதங்கள் வரும் வாய்ப்பிருப்பதால், முன்கோபத்தை குறைக்கப் பாருங்கள். செப்டம்பர் 9ம் தேதி முதல் செவ்வாய் 6ம் இடத்தில் வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த நெருக்கடி, சங்கடம் யாவும் தானே விலகும். சொந்த வீடு வாங்க விரும்புவர்களின் கனவு நனவாகும். 21ம் தேதி 7ல் இருக்கும் புதன் பெண்களுக்கு சிறிது மனக் கலக்கத்தைத் தந்தாலும், 22ம் தேதி முதல் அஷ்டம வீட்டுக்கு மாறும் அவர் சொந்தங்களின் வரவையும், மகிழ்ச்சியையும் சேர்த்தழைத்து வருவார். சுக்ரன் 10ம் தேதி முதல் அஷ்டம வீட்டில் அமர்வதால், கலைஞர்களுக்கு விருந்து உபசரிப்பு, கலகலப்பு என்று மகிழ்ச்சிக்கு குறைவிராது. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்த மந்தமான சூழ்நிலை மாறி உற்சாகமாய் செயல்படுவார்கள். அக்டோபர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 27. சூரியன் 8, 9 வீடுகளில் சுழலுவதால், வியாபாரிகளுக்கு பராமரிப்புச் செலவுகள் சற்றே அதிகமாகும். அத்துடன் நல்ல சரக்கு கொள்முதலுக்காக சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். செவ்வாய் 29ம் தேதி வரை 6ம் இடத்தில். உடன்பிறப்புகள் பாசத்தை பொழிவார்கள். மருத்துவச்செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஆதரவால், குடும்ப வளம் மேலும் உயரும். பிறகு செவ்வாய் 7ம் இடத்தில் சிறிய மனத்தாங்கலால் நட்பில் உரசல் தோன்றி மறையும். புதன் 9ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை 9ல். சுயதொழில் புரிபவர்கள் வீண் ஜம்பத்தை விரட்டியடித்தால், செலவுகள் தானே குறைந்து விடும். மாணவர்கள் இரவலாக புத்தகங்கள் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்தல் நலம். பிறகு புதன் 10ம் இடத்தில் ஜொலிப்பதால், பணியில் இருப்பவர்கள் பணியில் மனதுக்குப் பிடித்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். 10 வீடுகளில் உலா வரும் சுக்ரன் கலைஞர்களின் வசதிக்கேற்ற வீடு மாற்றம், வாகன மாற்றம் ஆகியவற்றிற்கு அடி கோலுவார். புதிய ஆபரணங்கள் பெண்கள் வசமாகும். 28ம் தேதி முதல் சுக்ரன் 10ல் நிற்பதால், பெண்கள் ஆபரணங்களை பத்திரமாக வைப்பது அவசியம். நவம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 24, 28. சூரியன் முன் மாதத்தில் 9ல். பணியிடத்தில் கோபதாபங்களுக்கு இடம் கொடாமல் இருந்தால், உங்கள் கௌரவம் சிறப்பாகவே இருக்கும். பெண்களுக்கு மனதில் சிலசமயம் எதிர்மறையான எண்ணங்கள் ஓடும் வாய்ப்பிருப்பதால், இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவது அவசியம். பிறகு சூரியன் 10ம் இடத்தில் குடும்பப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். உறவினர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். செவ்வாய் 7ம் இடத்தில் நிற்பதால், பிறரிடம் பணி சம்பந்தமான விஷயங்களை பரிமாறிக் கொள்வதைத் தவிர்த்து விடவும். வழக்குகளில் தேக்க நிலை காணப்படும். பணியில் இருப்பவர்கள் பேச்சைக் குறைத்து செயலில் கவனத்தைத் திருப்பினால், விரும்பிய மாற்றம் கிடைப்பது உறுதி. 10ம் இடத்தில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் அடைகிறார். பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நிறைவான பலனும், நிறைய லாபமும் கிடைக்கும். 14ம் தேதி முதல் 9ம் வீட்டில் அமர்கிறார். சனி பகவான் 10ல் கேது உள்ளதால், புதிய வேலையாட்களிடம் முக்கிய பொறுப்புக்களை ஒப்படைக்காமலிருந்தால், பணம் விரையமாகாமலிருக்கும். சுக்ரன் 21ம் தேதி முதல் 11ம் வீட்டில் நிற்பதால், குறித்த நேரத்தில் வேலைகள் முடிவதால் கலைஞர்களின் லாபம் இரட்டிப்பாகும். டிசம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 24, 25, 28. சூரியன் 10, 11 வீடுகளில் உலா வருவதால், அலுவலகத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவரின் அதிகார பலம் கூடும். ஓரளவு கடன் சுமை குறைவதால், சுய தொழிலில் இருப்பவர்களுக்கு žரான முன்னேற்றம் இருக்கும். செவ்வாய் இந்த மாதமும் 7ல் உள்ளதால், குடும்பச் சொத்துக்காக, கருத்து மோதல்கள் உருவாகும். பெண்கள் வீட்டுப் பொருள்களை வாங்குவதற்காக தங்கள் சேமிப்பை கரைப்பார்கள். பணியில் இருப்பவர்கள் நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். 10ல் இருக்கும் புதன் 14ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி அடைகிறார். மாணவர்களின் ஞாபக சக்தியும், கல்வி பயிலும் ஆற்றலும் மேலும் சிறக்கும். பணிபுரிபவர்களுக்கு, பாராமுகமாய் இருந்த அதிகாரிகள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். சுக்ரன் இந்த மாதம் 11, 12 வீடுகளில் உலாவருவதால், திருமண வயதில் உள்ள பெண்கள் மாங்கல்யம் சூடும் யோகத்தை பெறுவார்கள். |
|
|
Thappu Seiravangala Mannikirathe Oru Periya Thandanai!
|
Re: 2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Kumbam 1 month, 2 weeks ago #1439
|
|
|
|
Work Hard... Play Hard!
|
Re: 2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Kumbam 1 month, 2 weeks ago #1451
|
hahaha thala enoda raasi paknom na puriya mathikuthu thala but nalla informations Diana thnQ...
|
|
|
cutest, hottest, talented, loverboy...
|
|
Time to create page: 0.36 seconds