|
Welcome,
Guest
|
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Meenam
(1 viewing) (1) Guest
Tips
|
TOPIC: 2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Meenam
2012-ம் வருட ராசிபலன் - Tamil Horoscope 2012 - Meenam 1 month, 2 weeks ago #1423
|
ஜனவரி
அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19, 24, 28. இந்த மாதம் சூரியன் 10, 11 இடங்களில் நிற்கிறார். வியாபாரிகள் வேலையாட்களால் ஏற்பட்ட தொல்லைகளில் இருந்து விடுபடுவதோடு, எந்த வேலையையும் நாளை என தள்ளி வைக்காமல் இன்றே சுறுசுறுப்பாக செய்து முடிப்பார்கள். பெண்களுக்கு அண்டை, அயலாரின் செயல்பாடுகளால் இருந்த எரிச்சல் மாறி மீண்டும் சுமூகமான உறவு மலரும். 7ம் தேதி முதல் புதன் 10, 11 வீடுகளில் உலா வருவதால், வியாபாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு வங்கிக்கடன் குறித்த நேரத்தில் கிட்டுவதால், புதுத் திட்டங்கள் மளமளவென்று நடைபெறும். 29ம் தேதி வரை சுக்ரன் 9ல். கொண்டாட்டம், சுற்றுலா ஆகியவற்றில் கலந்து கொள்வதால் ஏற்படும் கலகலப்பு இளம் வயதினரின் மனதில் இருந்த சோர்வை விரட்டி அடித்து விடும். பின் சுக்ரன் 10ம் இடம் போவதால், கலைஞர்கள் ஓய்வு எடுத்து மனதையும் உடலையும் புதுப்பித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று தீட்டிய திட்டத்தில் பல தேவையற்ற மாறுதல்கள் ஏற்படும். செவ்வாய் 8ம் தேதி முதல் 10ம் இடத்தில் அமர்வதால், பணியில் இருப்பவர்கள் வேலைக்கு நேரம் ஒதுக்குவதைப் போல், குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மன நிம்மதியோடு பணிகளை செய்து முடிக்க இயலும். மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது, பாடல்களை கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும் செல்வதை அறவே தவிர்த்து விடவும். பிப்ரவரி அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 13, 15, 19, 24, 28. சூரியன் மாதம் முன் பகுதியில் 11ல் உலா வருவதால், தொழிலாளர்களின் திறமைக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் தொழில் சார்ந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தி லாபம் காண்பர். பின் சூரியன் 12ம் இடம் செல்வதால், கடும் போட்டி, வேலைப்பளு ஆகியவற்றால் உற்சாகத்தின் அளவு குறையாமல் பார்த்துக்கொண்டால் சுயதொழில் புரிபவர்களின் லாபம் žராக இருக்கும். தேடி வரும் புதிய பொறுப்புக்கேற்ப, பொறுப்பில் உள்ளோர்கள் தங்கள் திறமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படலாம். 15ம் தேதி முதல் 11ம் இடத்தில் நிற்கும் செவ்வாய் முடங்கிக்கிடந்த மனம், பணி இரண்டிற்கும் புத்துயிர் அளிப்பதால், பணியில் இருப்பவர்கள் புது உற்சாகத்துடன் திகழ்வார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிரடித்திட்டங்களால் நினைத்ததை சாதித்து பெருமையுடன் வலம் வரும் காலமிது. புதன் 18ம் தேதி முதல், 12ம் இடத்தில் நிற்கிறார். மாணவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று சென்றால், வம்புகள் உங்கள் பக்கம் வராமலிருக்கும். சுக்ரன் 23ம் தேதி வரை 10ல். கலைஞர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பக்குவமாகக் கையாண்டால், தொழிலில் நிலைத்து நிற்பது ஓரளவு சாத்தியமாகும். பிறகு சுக்ரன் 11ம் இடம் செல்வதால், நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவுகள் உங்களின் முயற்சிக்குத் தூண்டு கோலாய்த் திகழ்வார்கள். மார்ச் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 24, 25, 28. சூரியன் 12, 1 வீடுகளில் நிற்பதால், பெண்கள் முக்கியமான பொருட்களை பத்திரமாக வைப்பது அவசியம். குடும்பத்தாரின் தேவைகளை சற்று சிரமப்பட்டு நிறைவேற்றினாலும் நல்ல பெயர் ஏதும் இராது. வெளிநாடுகளில் வேலைக்காக முயற்சி எடுப்பவர்கள் புதியவர்களை நம்பி பெருந்தொகையை கொடுக்க வேண்டாம். செவ்வாய் 24ம் தேதி வரை 11ல் வியாபாரிகளுக்கு போட்டிகள் குறைவதோடு வணிக வட்டத்தில் செல்வாக்கும் உயரும். பிறகு செவ்வாய் 12ம் இடம் போவதால், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் வேலை செய்யும் போது கூர்மையான பொருட்களில் கவனமாக இருந்தால், காயம் படுவதைத் தவிர்த்து விடலாம். விலை உயர்ந்த உபகரணங்களின் பயன்பாட்டில் மாணவர்கள் கவனமாய் இருந்தால், வீண் அபராதம் கட்ட வேண்டியிராது. புதன் 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை உங்கள் ராசியில் இருக்கிறார். மாணவர்கள் தேர்வுக்குத் தேவையான புத்தகம் ஆகியவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கடைசி நேரத்தில், அலைச்சலின்றி தேர்வுக்குத் தயாராக இயலும். பிறகு புதன் 2ம் இடம் போவதால், கடன் தொல்லைக்கு தவணை சொல்லி வந்த நிலை மாறுவதால், சுயதொழில் புரிபவர்களின் மனதில் உற்சாகம் தங்கும். சுக்ரன் இந்த மாதம் 11, 12 வீடுகளில் உலா வருவதால், கலைத்துறையில் இருப்பவர்களின் புகழைப் பரப்பும் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பிருக்கும். ஏப்ரல் அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 21, 23, 28, 30. சூரியன் 1, 2 வீடுகளில் நிற்பதால், குடும்பத்தில் தாய் தந்தையினரின் உடல் நிலையில் ஏற்படும் சிறு சிறு உபாதைகளை உடனுக்குடன் கவனித்து வர, ஆரோக்கிய அச்சுறுத்தல் ஏதும் இராது. பெண்கள் வீண் ஜம்பத்தை வளர விடாமலிருந்தால், வேண்டிய காரியங்களுக்கு பணம் ஒதுக்குவதில் தடை ஏதுமிராது. பொது சேவையில் இருப்பவர்கள் மன உளைச்சலையும், வீண் பழியையும் விலக்க பாடுபட நேரிடும். மேலும் பணத்தட்டுப்பாடு இல்லாமலிருக்க ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. செவ்வாய் இந்த மாதம் 1ல் நிற்கிறார். பிள்ளைகளின் போக்கில் ஏற்படும் மாறுதல்களால் உறவுகளின் நடுவில் சிறு சச்சரவு தோன்றி மறையும். வேலையில் இருப்போர், நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆட்படும் வாய்ப்பிருப்பதால், வீண் அரட்டை, விவாதம் ஆகியவற்றில் கலந்து கொள்ளாதிருப்பது நல்லது. 2ல் இருக்கும் புதன் ஏப்1 முதல் புதன் வக்ரம் ஆகி 23ல் வக்ர நிவர்த்தி பெற்று விடுகிறார். பங்குதாரர்கள் காட்டும் ஆதரவால் வியாபாரிகள் புதிய திட்டங்களில் முழு மூச்சாக இறங்குவார்கள். இளைஞர்களின் புத்திக்கூர்மை மேலும் மெருகேறும். 16ம் தேதி முதல் உங்கள் ராசியில் நிற்கும் சுக்ரன் விலகிச்சென்ற நட்பை மீண்டும் இணைப்பதால், புதிய முயற்சிகளில் எளிதில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகளும் உங்கள் வசமாகும். மே அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 19, 23, 24, 28. சூரியன் முன் பகுதியில் 2ல் நிற்கிறார். கர்ப்பிணிப் பெண்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் பிறரின் ரகசியங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமலிருந்தால், வீண் தொல்லைகள் உங்கள் பக்கம் வராமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நல்லதே நினைத்தாலும் சிலர் அதை தவறாக நினைத்து உங்களையே தாக்கிப் பேசுவார்கள். பிறகு சூரியன் மே இடத்தில் நிற்கிறார். பணியில் இருப்பவர்களுக்கு உயர்ந்த மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும் இந்த மாதம் 3ம் தேதி முதல் செவ்வாய் 2ம் இடத்தில் நிற்கிறார். வீடுகட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக்கூடும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். புதன் இந்த மாதம் 2ல் இருப்பதால், வியாபார உலகில், உங்கள் பெயருக்கு தனி மதிப்பிருக்கும். சுக்ரனும் இந்த மாதம் 11ம் தேதி முதல் 2ம் இடத்தில் நிற்கிறார். கலைப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு, வாடிக்கையாளர்கள் வரவு, அவர்களின் மகிழ்ச்சி, அதன் மூலம் வரும் லாபம் ஆகியவை மேலும் அதிகமாகும். குரு பகவான் 7ம் தேதி முதல் 2ம் இடத்திற்கு செல்கிறார். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். சுய தொழில் புரிபவர்கள் பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். ஜூன் அதிர்ஷ்ட தேதிகள்: 1, 5, 6, 14, 15, 19, 23, 24, 28. சூரியன் மாத முன் பகுதியில் 3ல் நிற்கிறார். செய்தொழிலில் தோன்றும் பிரச்சினைகள் சாமர்த்தியமாகத் தீர்ந்து, உங்கள் பெயரை நிலை நிறுத்திக்கொள்வீர்கள். பிறகு சூரியன் 4ம் இடம் செல்வதால், பெண்களின் வரவு செலவுகள் கட்டுக்குள் இருந்தால், பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு இடமிராது. செவ்வாய் 12ம் தேதி முதல் 3ம் இடத்திற்கு தாவுவதால், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகள் விரைந்து முடியும். உங்கள் பேச்சில் கம்பீரமும், கௌரவமும் கூடும். புதன் 3, 4, 5 வீடுகளைத் தாண்டிப் போவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தால், வேலைகள் தேங்காமலிருக்கும். மேலும் அதிக அலைச்சல், அகால போஜனம் இரண்டையும் தவிர்ப்பது நலம். மாணவர்கள் சண்டைக்கு அஸ்திவாரம் போடுபவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியம். சுக்ரன் இந்த மாதம் 2, 3 வீடுகளில் தங்குவதால், கலைஞர்களின் நூதன முயற்சிக்கு நல்ல வரவேற்பிருக்கும். 6ம் தேதி முதல் கேது 3ம் இடத்திற்கு மாறுகிறார். கணிதத்துறையாளர்களுக்கு அனுகூலமான போக்குத் தென்படும். நிலபுலங்கள் லாபம் தரும். பெண்களுக்கு உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். ராகு 9ம் இடத்திற்கு செல்கிறார். பழைய வாகனங்களை விற்று புதிய நவீன வாகனங்கள் வாங்குகையில் ஏமாற்றப்படாமலிருக்க நாணயமானவர்களை அணுகவும். ஜூலை அதிர்ஷ்ட தேதிகள்: 1, 2, 6, 10, 11, 15, 18, 19, 24, 27, 28. சூரியன் 4, 5 வீடுகளில் நிற்கிறார். வாழ்க்கைத்துணைவரின் உடல் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். பெண்களுக்கு வேண்டாதவர்களால் பிரச்சினைகள் எழும் வாய்ப்பிருந்தால், பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. செவ்வாய் 24ம் தேதி வரை 3ல், இதுவரை வாடகை வீட்டில் அல்லல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் தன் மனம் விரும்பிய, கனவு இல்லத்தில் குடியேறி மகிழ்வார்கள். அலுவலகத்திலும், வெளிவட்டார பழக்கத்திலும் உங்கள் இனிய பேச்சால் பலரின், அறிமுகம் கிட்டும். பிறகு செவ்வாய் 4ம் இடம் போவதால், கனரக இயந்திரங்களை இயக்குபவர்கள் தகுந்த பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். புதன் 19ம் தேதி வரை 5ல் இருப்பதால், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சின்ன விஷயங்களுக்காக கடும் வாக்குவாதத்தில் இறங்குவதை அறவே தவிர்த்து விட்டால், அமைதியைத் தேடி ஓட வேண்டாம். பிறகு புதன் 6ம் இடம் செல்கிறார். வியாபார விருத்திக்கான நூதன எண்ணங்கள் மனதில் மலரும். சுக்ரன் 4, 5 வீடுகளில் தங்குகிறார். கலைஞர்களின் புதிய முயற்சிகளில் புதுமையும், திறமையும் சேர்ந்து மிளிரும். ஆகஸ்ட் அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 10, 11, 15, 19, 20, 24. சூரியன் முன் பகுதியில் 5ல் நிற்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்கள் தவறான வழியில் சலுகைகளைப் பெற நினைப்பவர்களுக்கு ஆதரவு காட்டி அவதிப்பட வேண்டாம். பிறகு ஆதவன் 6ம் இடத்தில் பிரகாசிப்பது போல், மாணவர்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தன்னம்பிக்கை துளிர்விடும். சுயதொழில் புரிபவர்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுக்கும் சூழலில் இருப்பதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவார்கள். செவ்வாய் 4ல் இருப்பதால், பணியில் இருப்பவர்கள் ஆரோக்கியம் žரான நிலையில் இருக்க, அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக்கொள்வதுடன் சத்தான உணவையும் உண்டு வருவது நல்லது. அத்துடன் வீண் கோபம், தேவையில்லாத விமர்சனம் ஆகியவற்றை வளர விடாதீர்கள். 6ல் இருக்கும் புதன் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை வக்ர கதியில் 5ம் இடத்திற்கு சென்று 7ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி பெறுகிறார். வியாபாரிகள் ஆரம்ப முயற்சிகளில் கடின உழைப்பை இணைத்து வெற்றி வரும் வழியை உறுதியாக்குவார்கள். 17ம் தேதி முதல் சுக்ரன் 6ம் இடத்திற்கு செல்கிறார். கலைஞர்கள் வீண்கோபம், தேவையில்லாத விமர்சனம் ஆகியவற்றை வளர விட வேண்டாம். செப்டம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23. சூரியன் முன் பகுதியில் 6ம் இடத்தில் ஒளிர்கிறார். தொல்லை தந்த தீயவர் தலை வணங்கி நடப்பார்கள். மாணவர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய அளவிற்கு மன வலிமையும், உடல் வலிமையும் கூடும். சூரியன் பிறகு 7ம் இடத்தில் அடங்கிக் கிடப்பதால், கொடுக்கல் வாங்கல் மூலம் நல்ல நட்பு முறிய இடம் கொடாதீர்கள். பெண்கள் முக்கியமான பொருட்களைப் பத்திரமாக வைத்தால் வீண் தேடலைத் தவிர்த்து விடலாம். செவ்வாய் 9ம் தேதி முதல் 5ல் நிற்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்கள் தான் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் பிடிப்பதிலிருந்து இறங்கி வந்தால், உயர்வுப்படிகளில் ஏறுவது உறுதியாகும். 5ல் இருக்கும் புதன் 22ம் தேதி முதல் 6ம் இடத்திற்கு மாறுகிறார். வேலை காரணமாக வரும் இடமாற்றங்கள் பல நன்மைகளைக் கொண்ட வரும். சுக்ரன் இந்த மாதம் 6, 7 வீடுகளில் தங்குவதால், கலைஞர்கள் தஙகளை தேடி வரும் நன்மைகளை விரட்டாமலிருக்க, உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். உங்களுக்கு நன்மை செய்வதாகச் சொன்னவர்களுக்காக உங்கள் கையிருப்பை கரைத்தாலும் மிஞ்சுவது ஏமாற்றமே. அக்டோபர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 15, 18, 19. சூரியன் 7, 8 வீடுகளில் தங்குவதால், பணியில் உள்ளவர்கள் யாரிடமும் கோபம், வேகத்தை காண்பிக்காமல் அமைதியாக செயல்பட வேண்டும். சக ஊழியர்கள் திடீர் விடுமுறையால் செல்வதால், கூடுதல் வேலைப்பளுவைச் சுமக்க வேண்டி இருக்கும். செவ்வாய் 29ம் தேதி வரை 5ல் பொது வாழ்வில் உள்ளவர்கள் மறைமுகத் தொந்தரவுகளை கட்டுக்குள் வைக்க, எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சில நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமலிருந்தால், உங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக்கொண்டு விடலாம். பிறகு செவ்வாய் 6ம் இடத்திற்கு செல்கிறார். பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் விசேஷ சலுகைகளை பெறுவார்கள். 4ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை அஷ்டம வீட்டில் நிற்கும் புதன் உங்கள் திறமைகளை மேலும் மெருகேற்றுவதால், மாணவர்கள் போட்டிகளில் வெற்றிக் கோப்பைகளைக் குவிப்பார்கள். பிறகு புதன் 9ம் இடம் சென்று விடுகிறார். வியாபார வட்டத்தில், நண்பர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். கலைஞர்கள் தீய பழக்கங்களின் பக்கம் திரும்பாமலிருந்தால், நல்லோரின் ஆதரவு நிலையாக இருக்கும். சுக்ரன் இந்த மாதம் 8, 9 வீடுகளில் தங்குவதால், கை வேலைகளில் ஈடுபடுபவர்களின் பொருளுக்கு நல்ல லாபமிருக்கும். நவம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 28. 9ம் இடத்தில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் அடைகிறார். உங்களைத் தேடி வருபவர்களுக்கு உதவும் குணம் இருந்தாலும், மற்றவர்கள் உங்களை ஏமாற்ற இடம் கொடாதீர்கள். சூரியன் 8, 9 வீடுகளில் அமர்வதால், பெற்றோர்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை கவனித்து நல்வழிப்படுத்தினால், நல்ல பாதையை நாடுவதுடன் கல்வியிலும் கவனம் செலுத்துவார்கள். 14ம் தேதி முதல் 8ம் வீட்டில் அமர்கிறார். சனி பகவான், சொத்து பராமரிப்பில் உரிய கவனம் செலுத்துவது அவசியம். பொது பிரச்சினைகளில் ஈடுபடும் முன் அவற்றின் சாதக பாதகங்களை தெரிந்து வைத்துக்கொண்டு செயல்படுவது முக்கியம். செவ்வாய் இந்த மாதம் 6ம் வீட்டில் உள்ளார். கடினமான பிரச்சினைகளைத் தீர்க்க உங்கள் செல்வாக்கும், சொல்வாக்கும் உதவியாக இருக்கும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு திறமையின் அடிப்படையில் அதிக லாபமும், புதிய ஒப்பந்தமும் கிட்டும். 21ம் தேதி முதல் சுக்ரன் 10ம் வீட்டிற்கு மாறுகிறார். கலைஞர்கள் பிரச்சினைக்குரிய விஷயங்கள், பிரச்சினைக்குரிய நபர்கள் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருந்தால், அமைதியாய் செயல்பட முடியும். டிசம்பர் அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 24, 25, 28. சூரியன் மாத முன் பகுதியில் 9ம் இடத்தில் உள்ளார். பெண்கள் பிறருடன் பழகுவதில் கவனமாய் இருந்தால், வீண் பிரச்சினைகள் உங்கள் எல்லைக்குள் வராது. பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற, பொறுமையாக செயல்படுவது அவசியம். பிறகு சூரியன் 10ம் இடம் செல்கிறார். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாராட்டும், பரிசும் கிட்டும். செவ்வாய் இந்த மாதமும் 6ல் உள்ளார். வீடு, கடை ஆகியவற்றின் விரிவாக்க முயற்சிகளை விரும்பிய வண்ணம் முடித்து விடுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க அதிகாரிகள் முன் வருவதால், பணிகள் விரைந்து நடக்கும். 9ல் இருக்கும் புதன் 14ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி அடைகிறார். வியாபாரிகள் வெளிவிவகாரங்களில் நடுநிலையான செயல்பாட்டை மேற்கொண்டால், பொது ஆதரவு உங்கள் பக்கமே! மாணவர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லா விஷயங்களையும் பக்குவமாகக் கையாள்வது முக்கியம். 15ம் தேதி வரை 10ம் இடத்தில் இருந்து கொண்டு கலைஞர்களின் மனதில் குழப்பத்தைத் தோற்றுவித்த சுக்ரன், 16ம் தேதி முதல் 11ம் இடம் போவதால், கலைஞர்களுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய உதவி தக்க சமயத்தில் கிட்டும். |
|
|
Thappu Seiravangala Mannikirathe Oru Periya Thandanai!
|
|
Time to create page: 0.36 seconds